முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் 11 மாவட்டங்களில் 13-ம் தேதி வரை இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

வெள்ளிக்கிழமை, 10 மே 2024      இந்தியா
India-Meteorological 2022

Source: provided

திருவனந்தபுரம் : கேரளாவில் 11 மாவட்டங்களில் வரும் 13-ம் தேதி வரை இடிமின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

கேரளாவில் கடந்த சில மாதங்களாக கடும் வெப்பம் நிலவி வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகமானதால் மின் நுகர்வும் அதிகரித்தது. இதனால் மின் நுகர்வுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் குறைந்து வருகிறது. வரும் நாட்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக இந்திய வானிலை மையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், 

வருகிற 13-ம் தேதி வரை கேரளாவில் ஓரிரு இடங்களில் இடி-மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம் திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம் மற்றும் வயநாடு ஆகிய 11 மாவட்டங்களில் மழையுடன் காற்றின் வேகமும் அதிகமாக இருக்கும். 

மணிக்கு 30 முதல் 40 கி.மீட்டர் வேகத்தில் இது இருக்கும். எனவே பொதுமக்கள் நீர் நிலைகள் பகுதிக்கு செல்ல வேண்டாம். வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து