முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தவறான தகவல்களை பரப்புகின்றன: நீட் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு

வியாழக்கிழமை, 4 ஜூலை 2024      இந்தியா
Neet 2023-04-20

Source: provided

புதுடெல்லி: நீட் தேர்வு விவகாரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட இன்டியா கூட்டணி கட்சிகள் பொய் சொல்வதை தவிர்க்க வேண்டும் என தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

இளநிலை மருத்துவப்படிப்புகளுக்கு நடத்தப்பட்ட நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது அம்பலமானது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.இந்த பிரச்சினையை முன்வைத்து நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் மத்திய அரசை காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றன.ஆனால் இந்த விவகாரத்தில் தவறான தகவல்களை பரப்புவதாக எதிர்க்கட்சிகளை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-

கடந்த கால மற்றும் நிகழ்கால பிரச்சினைகளில் நாட்டை ஏமாற்றிய வரலாறு காங்கிரசுக்கு உண்டு. அவர்களின் இந்த எண்ணம் நீட் விவகாரத்திலும் வெளியில் வந்துள்ளது.பொய்கள் மற்றும் வதந்திகளின் உதவியுடன் பிரச்சினைகளில் இருந்து விலகி நிலையற்ற தன்மையை உருவாக்கும் இன்டியா கூட்டணியின் நோக்கம் தேசநலன் மற்றும் மாணவர்களுக்கு எதிரானது,நாட்டின் இளைஞர்கள் மற்றும் இளைஞர் சக்திக்கும், அவர்களது எதிர்காலத்துக்கும் அரசு மிகுந்த முன்னுரிமை அளிப்பதாக பிரதமர் மோடி மாநிலங்களவையில் ஆற்றிய உரையில் மீண்டும் உறுதிபட தெரிவித்து இருக்கிறார்.

மேலும் ஒவ்வொரு மாணவருடனும் அரசு துணை நிற்பதாக அவர் உறுதியளித்து இருக்கிறார். மாணவர்களுக்கு ஒருபோதும் அநீதி ஏற்பட அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

நீட் முறைகேடு பிரச்சினையில் ஒரு சட்டம் மூலம் அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து இருக்கிறது. தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் யாரும் தப்பமாட்டார்கள் என்று நாடு நம்புகிறது. எனவே நீட் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியும், இன்டியா கூட்டணியும் தங்களின் தவறான ஏமாற்றுக் கொள்கையை கைவிட வேண்டும். பொய்யான தகவல்களை கூறி மாணவர்களையும், பெற்றோரையும் திசை திருப்புவதை நிறுத்த வேண்டும்" இவ்வாறு தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து