முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

பெப்பர் சிக்கன்

Cooking time in minutes: 
20
Ingredients: 

பெப்பர் சிக்கன் செய்யத்தேவையான பொருட்கள்.

  1. போன்லெஸ் சிக்கன் துண்டுகள் – 2. (நெஞ்சு கறி)
  2. வெள்ளை மிளகுதூள் - 1/4 டீஸ்பூன்.
  3. கருப்பு மிளகுதூள் - 1/2 டீஸ்பூன்.
  4. சீரகத்தூள் - ஒரு ஸ்பூன்.
  5. பட்டர் - 50 கிராம்.
  6. மேப்பிள் சிரப் - 2 ஸ்பூன்.
  7. சோயாசாஸ்  2 ஸ்பூன்.
  8. வினிகர் - ஒரு ஸ்பூன்.
  9. பொடியாக நறுக்கிய பூண்டு - ஒரு பல்.
  10. எண்ணெய் - 2 கரண்டி.
  11. உப்பு - சிறிதளவு.
Method: 

 

செய்முறை ;--

  1. 2 துண்டு போன்லெஸ் சிக்கனை எடுத்து அதன் மேல் லேசாக டைமன் சைஸில் நறுக்கி சதுரம் சதுரமாக சிக்கன் வரும் படிகீறி வைத்துக்கொள்ளவும்.
  2. நறுக்கி வைத்துள்ள சிக்கனை ஒரு தட்டில் எடுத்து கொண்டு இதன் மேல் 1/4 டீஸ்பூன் வெள்ளை மிளகுதூள்,1/2 டீஸ்பூன் கருப்பு மிளகுதூள்,ஒரு ஸ்பூன் சீரகத்தூள் மற்றும்  சிறிதளவு உப்பை தூவி திருப்பி திருப்பி போட்டு நன்றாக தடவி விட்டு சிக்கனை 5 நிமிடம் ஊற வைத்துக்கொள்ளவும்.
  3. அடுப்பில் கடாய்யை வைத்து 2 கரண்டி எண்ணெய்யை ஊற்றவும்.
  4. எண்ணெய் சூடானவுடன் ஊற வைத்து தயார் செய்து வைத்துள்ள சிக்கனை எண்ணெயில் போட்டு நன்றாக பொரிக்கவும்.
  5. இதனுடன் 50 கிராம் பட்டர் போட்டு நன்றாக வேக விடவும். 
  6. திருப்பி திருப்பி போட்டு சிறிது நேரம் நன்றாக வேக விடவும்.
  7. இதனுடன் 2 ஸ்பூன் மேப்பிள் சிரப்,சோயாசாஸ்  2 ஸ்பூன்,ஒரு ஸ்பூன் வினிகர்,பொடியாக நறுக்கிய ஒரு பல் பூண்டு போட்டு  சிக்கனை திருப்பி போட்டு சிறிது நேரம் நன்றாக வேக விடவும்.
  8. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  9. சுவையான பெப்பர் சிக்கன் ரெடி.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago