முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் 12 இயற்கை உணவுகள்.

  • ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் 12 இயற்கை உணவுகள் எவை என பார்க்கலாம்.

1.மக்காசோளம் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் சக்தி கொண்டது,மக்காசோள முத்துக்களை பிரித்து நீரில் 8 மணி நேரம் ஊற வைத்து நன்றாக அரைத்து அதனுடன் தேன் கலந்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். ஹீமோகுளோபின் அளவு சரியாக உள்ளவர்கள் வாரம் இரு முறை சாப்பிடலாம்.

2.தினை அரிசியில்  கால்சியம் சத்து அதிகமாக உள்ளதால் நமது எலும்புகள் பலப்படுகிறது,தினை அரிசியை நமது உணவில் பயன் படுத்தி வந்தால் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்.

3.பீட்ருட் ஹீமோகுளோபின் அளவை கூட்ட நன்கு உதவுகிறது 90 நாட்கள் தினமும் 50 மில்லி பீட்ருட் சாறு அருந்தி வந்தால் ஹீமோகுளோபின் அளவு நன்கு உயரும்.

4.பேரிச்சம்பழம் மற்றும் அத்திப்பழம் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் சக்தி கொண்டது மேலும் இதில் இரும்பு சத்து அதிகமாக உள்ளதால் மலச் சிக்கல் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் பேரிச்சம்பழம் மற்றும் அத்திப்பழம் சாப்பிடும்போது உடன் ஒரு வாழைப்பழத்தையும் சேர்த்து சாப்பிடுவதால் முழுப்பலனையும் தரும், பேரிச்சம்பழம், அத்திப்பழம் மற்றும் வாழைப்பழம் ஆகியவற்றை சேர்த்து சாப்பிடுவதால் கர்ப்பகாலத்தில் தாய் சேய் நலன் மேம்படும்.

5.நிலக்கடலை ஹீமோகுளோபின் அளவை அதிகரிபதில் முக்கியமான பொருளாக உள்ளது,நிலக்கடலையை அவித்து சிறிதளவு இந்து உப்பு போட்டு உடன் எலுமிச்சம் பழ சாறை ஊற்றி கலந்து சாப்பிடுவதால் ஹீமோகுளோபின் அளவு நன்கு அதிகரிக்கும். 

6.உலர்  திராட்சை ஹீமோகுளோபின் அளவை கூட்டும் சக்தி படைத்தது.

48 நாட்கள் தொடர்ந்து உலர்  திராட்சை,பேரிச்சம்பழம் மற்றும் அத்திப்பழம் சாப்பிட்டு ஒரு டம்ளர் பீட்ருட் சாறு அருந்தி வந்தால் ஹீமோகுளோபின் அளவு நன்கு அதிகரிக்கும். உலர்  திராட்சை மலச் சிக்கலையும்  நீக்குகிறது.

7. ஆப்பிள் பழத்தில் எல்லா விதமான புரத சத்துக்களும் உள்ளன,தினமும் 2 ஆப்பிள் பழத்தை சாப்பிட்டால் வேறு எந்த உணவையும் சாப்பிடவேண்டியது இல்லை.ஆப்பிள் பழத்தை சாப்பிட்டால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.

8. கீரை வகைகள் அனைத்திலும் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் ஆற்றல் உள்ளது,முக்கியமாக முருங்கை கீரை மற்றும் அரைக்கீரையில் இரும்பு சத்து அதிகமாக உள்ளதால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.விட்டமின் மாத்திரை சாப்பிட்டால் கிடைக்கும் சக்தி முருங்கை கீரை சாப்பிட்டால் கிடைக்கிறது. அரைக்கீரை சாப்பிட்டால் உடலுக்கு தேவையான அளவு ரத்தம் அதிகரிக்கும்,மற்றும் இதில் உள்ள கால்சியம் சத்து எழும்புகளை பலப்படுத்துகிறது.

9. பூசணி விதை உடலில் உள்ள எல்லா நரம்புகளையும் பலப்படுத்துகிறது மற்றும் ஹீமோகுளோபின் அளவையும் அதிகரிக்கும்.

10. கடல் பாசியை  சாப்பிட்டால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். கடல் பாசி அதிக மருத்துவ குணம் கொண்டது.கடல் பாசி மலச் சிக்கலையும்  நீக்குகிறது.

11. ஸ்ட்ராபெர்ரி பழத்தை சாப்பிட்டால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும் மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளதால் நமது எலும்புகள் பலப்படுகிறது.

12. வாழைப்பழத்தை சாப்பிட்டால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும், மலைவாழைப்பழம், செவ்வாழைப்பழம்,நாட்டு வாழைப்பழம் மற்றும் பலவகையான வாழைப்பழங்கள் உள்ளன செவ்வாழைப்பழம் ஹீமோகுளோபின் அளவை கூட்டுவதுடன் உடலில் உள்ள உஷ்ணத்தையும் குறைக்க உதவுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 8 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 8 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 10 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 10 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 8 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 8 hours ago