முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்., அதிபர் மருத்துவமனையில் அனுமதி

புதன்கிழமை, 2 ஏப்ரல் 2025      உலகம்
Pak 2024-02-14

Source: provided

பாகிஸ்தான் : பாகிஸ்தான் அதிபர் உடல்நிலை பாதிப்பால்  மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார்.

பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜா்தாரி உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 69 வயதாகும் அதிபர், காய்ச்சல், தொற்று காரணமாக கராச்சியிலிருந்து சுமார் 300 கி.மீ. தொலைவில் உள்ள நவாப்ஷாவிலிருந்து மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டதாகச் செய்தி வெளியாகியுள்ளது.

அதிபர் ஜர்தாரி பல்வேறு மருத்துவ பரிசோதனைகளுக்கு உள்படுத்தப்பட்டார், மேலும் மருத்துவர்கள் அவரது நிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திங்களன்று ரம்ஜான் தொழுகை நடத்துவதற்காக அவர் நவாப்ஷாவுக்குச் சென்றிருந்தார், அதற்கு முன்பு ஞாயிற்றுக்கிழமை தனது கட்சித் தலைவர்களுடன் சந்திப்பை நடத்தியதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் தொலைபேசியில் அழைத்து அதிபர் ஜர்தாரியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். மேலும் அவர் விரைவில் குணமடையப் பிரார்த்தனை செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 days ago
View all comments

வாசகர் கருத்து