தின பூமி
முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக்கோரிய தமிழக அரசின் மனு வாபஸ்

செவ்வாய்க்கிழமை, 8 ஏப்ரல் 2025      தமிழகம்
TN 2023-04-06

புதுடெல்லி, டாஸ்மாக் நிறுவனத்தில் நடத்தப்பட்ட அமலாக்கத் துறை சோதனைக்கு எதிரான வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை தமிழக அரசு திரும்பப் பெற்றது.  

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை  நடத்திய சோதனையை சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரி தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.  இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு, அமலாக்கத் துறையின் பதில் மனுவுக்கு, தமிழக அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப்.28-ம் தேதிக்கு தள்ளி வைத்திருந்தனர். இதனிடையே, டாஸ்மாக் நிறுவனத்தில் நடத்தப்பட்ட அமலாக்கத்துறை சோதனைக்கு எதிரான வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரி தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்நிலையில், நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று (ஏப்.8) டாஸ்மாக் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, “தமிழக அரசு தரப்பில், இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளதால், வழக்கை தள்ளிவைக்க வேணடும்,” என கோரிக்கை வைக்கபட்டது.

அப்போது நீதிபதிகள், “வழக்கு விசாரணைக்கு வந்தபோதே சுப்ரீம் கோர்ட் செல்வதாக கூறியிருந்தால், வழக்கை நாங்கள் பட்டியிலிட்டிருக்க மாட்டோம். இதன் மூலம் நீங்கள் நீதிமன்றத்தை இழிவுபடுத்திவிட்டீர்கள். குறைந்தபட்சம் நீதிமன்றத்துக்காவது நேர்மையாக இருக்க வேண்டும் என அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும், இந்த மனு பொது நலனுக்காக தாக்கல் செய்யப்பட்டதா? அல்லது டாஸ்மாக் அதிகாரிகள் சிலரை காப்பாற்றுவதற்காக தாக்கல் செய்யபட்டதா?” என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினர். தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படவில்லை என்றால் பிற்பகல் வாதங்களை முன்வைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்திருந்தனர்.

இந்நிலையில், டாஸ்மாக் விவகாரம் தொடர்பான வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தலையிட மறுத்த சுப்ரீம் கோர்ட், டாஸ்மாக் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றமே முடிவு செய்யட்டும் என தெரிவித்தது. இதையடுத்து, வழக்கைத் திரும்ப பெறுவது குறித்து அரசின் கருத்தைக் கேட்டு தெரிவிப்பதாக, தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர், வழக்கை தமிழக அரசு திரும்பப் பெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து