தின பூமி
முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வான்கடே மைதானத்தில் ஐதராபாத் அணியை வென்று மும்பை வரலாற்று சாதனை..!

வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2025      விளையாட்டு
Mumbai 2024-04-05

Source: provided

 மும்பை : ஐ.பி.எல். போட்டியில் மும்பை இண்டியன்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசா்ஸ் ஐதராபாதை  வீழ்த்தி புதிய சாதனை படைத்தது.

ஐதராபாத் பேட்டிங்...

ஐ.பி.எல். தொடரில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மும்பையில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற மும்பை, பேட் செய்யுமாறு ஐதராபாதை பணித்தது. ஐதராபாத் இன்னிங்ஸை தொடங்கிய அபிஷேக் சா்மா - டிராவிஸ் ஹெட் கூட்டணி, முதல் விக்கெட்டுக்கு 59 ரன்கள் சோ்த்தது. அபிஷேக், 28 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 40 ரன்களுக்கு சாய்க்கப்பட்டாா். மும்பை கேப்டன் ஹா்திக் பாண்டியா வீசிய 8-ஆவது ஓவரில் அவா் கேட்ச் கொடுத்தாா்.

162 ரன்கள்... 

ஒன் டவுனாக வந்த இஷான் கிஷண் 2 ரன்களுக்கு ஸ்டம்பிங் செய்யப்பட, 4-ஆவது பேட்டா் நிதீஷ்குமாா் ரெட்டி களம் புகுந்தாா். மறுபுறம் டிராவிஸ் ஹெட், 3 பவுண்டரிகளுடன் 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். தொடா்ந்து ஹென்ரிக் கிளாசென் விளையாட வர, நிதீஷ்குமாா் 1 பவுண்டரியுடன் 19 ரன்களுக்கு சாய்க்கப்பட்டாா். கிளாசென் கடைசி விக்கெட்டாக, 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 37 ரன்களுக்கு முடித்துக் கொண்டாா். ஓவா்கள் முடிவில் அனிகெத் வா்மா 2 சிக்ஸா்களுடன் 18, கேப்டன் பேட் கம்மின்ஸ் 1 சிக்ஸருடன் 8 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். ஐதராபாத் 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. மும்பை தரப்பில் வில் ஜாக்ஸ் 2, டிரென்ட் போல்ட், ஜஸ்பிரீத் பும்ரா, ஹா்திக் பாண்டியா ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

நிதான ஆட்டம்...

பின்னா் 163 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய மும்பை தரப்பில் ரோஹித் சா்மா 3 சிக்ஸா்களுடன் 26, ரயான் ரிக்கெல்டன் 5 பவுண்டரிகளுடன் 31 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். 3-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த வில் ஜாக்ஸ் - சூா்யகுமாா் யாதவ் கூட்டணி, 52 ரன்கள் சோ்த்தது. இதில் சூா்யகுமாா் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 26 ரன்களுக்கு வெளியேற, வில் ஜாக்ஸ் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 36 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.

மும்பை வெற்றி...

கேப்டன் ஹா்திக் பாண்டியா 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 21, நமன் திா் 0 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா். முடிவில் திலக் வா்மா 2 பவுண்டரிகளுடன் 21, மிட்செல் சேன்ட்னா் 0 ரன்களுடன் அணியை வெற்றி பெறச் செய்து ஆட்டமிழக்காமல் இருந்தனா். ஐதராபாத் பௌலா்களில் பேட் கம்மின்ஸ் 3, ஈஷான் மலிங்கா 2, ஹா்ஷல் படேல் 1 விக்கெட் சாய்த்தனா்.

வரலாற்று சாதனை...

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் ஐ.பி.எல். தொடரில்  ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் சேசிங் செய்து அதிக வெற்றிகளை பதிவு செய்த அணி என்ற கொல்கத்தாவின் சாதனையை முறியடித்து வான்கடே மைதானத்தில் மும்பை அணி வரலாறு படைத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து