தின பூமி
முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 4 பேர் உயிரிழப்பு

சனிக்கிழமை, 19 ஏப்ரல் 2025      இந்தியா
Delhi 2025-04-19

Source: provided

புதுடெல்லி : தலைநகர் டெல்லியின் வடகிழக்கு பகுதியில் நேற்று (ஏப்.19) அதிகாலை நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. சுமார் 14 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 10 பேர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

டெல்லியின் முஸ்தபாபாத் பகுதியில் இந்தச் சம்பவம் அதிகாலை 3 மணி அளவில் நடந்துள்ளது. இதில் மீட்கப்பட்டவர்கள் ஜிடிபி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும் அந்த இடத்துக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு படையினர் மற்றும் காவல் துறையினர் விரைந்து சென்று, மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்த விசாரணை தொடங்கி உள்ளது.

கட்டிடம் இடிந்து விழுந்த போது பெரிய அளவில் தூசு ஏற்பட்டுள்ளது. இது அந்த கட்டிடத்துக்கு அருகில் இருந்த கட்டிடங்களில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளில் பதிவாகி உள்ளது. கடந்த வாரம் டெல்லியில் கட்டிடம் மற்றும் சுவர் இடிந்து விழுந்த இரு வேறு சம்பவங்களில் இரண்டு பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. முஸ்தபாபாத் கட்டிட இடிபாடுகளில் சுமார் 10 பேர் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இடிந்து விழுந்த கட்டிடத்தில் இருந்து 14 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பேர் உயிரிழந்தனர். மருத்துவர்கள் அதை உறுதி செய்துள்ளனர். 8 முதல் 10 பேர் வரை இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என கருதுகிறோம். இடிந்து விழுந்த கட்டிடம் நான்கு மாடி கட்டிடம்” என டெல்லி வடகிழக்கு மாவட்ட காவல் துறை துணை ஆணையர் சந்தீப் லம்பா தெரிவித்தார்.

எங்களுக்கு அதிகாலை 3 மணி அளவில் கட்டிடம் இடிந்து விழுந்தது குறித்த தகவல் கிடைத்தது. உடனடியாக நாங்கள் இங்கு விரைந்து வந்தோம். இந்த நான்கு மாடி கட்டிடம் முழுவதுமாக இடிந்து விழுந்துள்ளது. இதன் இடிபாடுகளில் மக்கள் சிக்கி உள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் தீயணைப்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்” என தீயணைப்பு துறை அதிகாரி ராஜேந்திர அத்வால் கூறியுள்ளார். டெல்லியில் நேற்றுமுன்தினம் மாலை நகரின் சில பகுதிகளில் மழை பொழிவு பதிவானது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து