தின பூமி
முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்மு-காஷ்மீரில் இதுவரை பத்து பயங்கரவாதிகளின் வீடுகள் இடித்து தரைமட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 27 ஏப்ரல் 2025      இந்தியா
Terrorist-house-destroyed-2

Source: provided

ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரில் 10 பயங்கரவாதிகளின் வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.

ஜம்மு - காஷ்மீரிலுள்ள பஹல்காம் சுற்றுலா தலத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பாகிஸ்தானிலிருந்து ஊடுருவியதாக சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் அங்கு சுற்றுலாவுக்குச் சென்றிருந்த 26 பேர் கொல்லப்பட்டனர். இதன் எதிரொலியாக, பாகிஸ்தானுடனான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டிருப்பதுடன் இருநாட்டு எல்லையில் போர்ப் பதற்றமும் அதிகரித்துள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கா்- ஏ- தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான ‘தி ரெசிஸ்டன்ஸ்  பிரண்ட்’ பொறுப்பேற்றது.

பஹல்காம் போன்று இனியொரு தாக்குதல் நிகழாமல் தடுக்கும் நோக்கத்துடன் கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதி களுக்கு உதவியதாக நூற்றுக்கணக்கானோரைப் பிடித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, தெற்கு காஷ்மீரில் நான்கு பயங்கரவாதிகளின் வீடுகள் வெள்ளிக்கிழமை இரவில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இந்தநிலையில், இதுவரை மொத்தம் 10 பயங்கரவாதிகளின் வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 12 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து