தின பூமி
முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீர்ப்பு எழுத தகுதி இல்லை: உ.பி.யில் நீதிபதியை பயிற்சிக்கு அனுப்பிய அலகாபாத் ஐகோர்ட்

திங்கட்கிழமை, 28 ஏப்ரல் 2025      இந்தியா
Allahabad-High-Court 2023-1

Source: provided

பிரயாக்ராஜ் : உத்தர பிரதேசத்தில் நீதிபதி ஒருவரை தீர்ப்பு எழுத தகுதி இல்லை எனக் கூறி அலகாபாத் உயர் நீதிமன்றம் மீண்டும் அவரை பயிற்சிக்கு அனுப்பி வைத்த விநோதமான சம்பவம் அரங்கேறியுள்ளது.

கான்பூர் நகரைச் சேர்ந்தவர் முன்னி தேவி. குத்தகை தொடர்பான இவரது வழக்கு ஒன்றில் கூடுதல் காரணங்களைச் சேர்க்க கோரிய மனுவை கூடுதல் மாவட்ட நீதிபதியான அமித் வர்மா தன்னிச்சையான முறையில் மூன்றே வரி உத்தரவில் தள்ளுபடி செய்தார். அத்துடன் மனு ஏன் நிராகரிக்கப்பட்டது என்பதற்கான காரணம் குறித்து அந்த நீதிபதி ஒரு வரி கூட தனது தீர்ப்பில் எழுதவில்லை.  

இதற்கு முன்பும் இதே நீதிபதி இதே போன்ற தவறை செய்ததாக கூறிய முன்னி தேவி தனக்கு நிவாரணம் கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தை நாடினார். அவரது ரிட் மனுவை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி நீரஜ் திவாரி , “ கான்பூர் நகர கூடுதல் மாவட்ட நீதிபதி அமித் வர்மா தீர்ப்பு எழுதத் தகுதியற்றவர் என்பது இந்த நீதிமன்றத்தின் உறுதியான கருத்து. எனவே, அவரை லக்னோவில் உள்ள நீதித்துறை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் குறைந்தபட்சம் 3 மாதங்கள் பயிற்சி பெற வேண்டும்" என்று உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து