முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

விண்வெளியில் பயிர்செய்த மிளகாயை சுவைத்த நாசா விண்வெளி வீரர்கள்

Image Unavailable

விண்வெளிக்கு செல்லும் விண்வெளி வீரர்களுக்கு உணவை கொண்டு செல்வதற்கு அதிக சக்தியும் நீண்ட காலமும் தேவைப்படுகிறது. குறிப்பாக செவ்வாய் கிரகத்துக்கு பேக் செய்யப்பட்ட உணவை கொண்டு செல்லும் போது அது கெட்டு போய் விடுகிறது. உணவின் தரம் பாதிக்கப்படுகிறது. வைட்டமின் சி மற்றும் கே போன்ற முக்கிய ஊட்டச்சத்துகள் பாதிக்கப்படுகின்றன என்றும் நாசா கூறியிருந்தது இங்கு கவனிக்கத்தக்கது.

தற்போது விண்வெளியில் மிளகாயை பயிரிட்டு அறுவடை செய்ததன் மூலம் வைட்டமின் சி தேவையை பெறுவதற்கான மிகச் சிறந்த ஆதாரமாக இது உள்ளது. இதற்காக நாசாவைச் சேர்ந்த ஒரு குழு கென்னடி விண்வெளி மையத்தில் வேலை செய்தது. இதற்காக நாசா பிரத்யேகமாக Advanced Plant Habitat என்ற இன்குபேட்டர் போன்ற சாதனத்தையும் தயாரித்தது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த சாதனம் பூமியில் உள்ளதை போன்றே மிளகாய் வளர்வதற்கு சாதகமான நீர், உரம், ஒளி, வெப்பம் போன்றவற்றை தருகிறது. இந்த சாதனத்தில் களிமண் கலவையால் உருவாக்கப்பட்ட தளத்தில் தூவப்பட்ட மிளகாய் விதைகள் வளர்வதற்கு சாதகமான சூழல் கிடைத்தவுடன் மெதுவாக வளர தொடங்கின.

மிளகாய் செடியின் வளர்ச்சியை 180 சென்சார்கள் கண்காணித்து தேவைக்கேற்ப நீர், உரம், ஒளி, வெப்பம் போன்றவற்றை அளித்தனர். இதனால் சர்வதேச விண்வெளி மையத்தில் செழித்து வளர்த்த மிளகாய் செடிகள் 4 மாதங்களில் அறுவடைக்கு தயாராகின. தற்போது அவற்றை நாசா விண்வெளி வீரர்கள் சுவைத்துள்ளனர். மேலும் பூமியில் விளைந்த மற்றும் விண்வெளியில் விளைந்த மிளகாய்களுக்கு இடையிலான ஒற்றுமை வேற்றுமைகளையும் ஆராய்வதற்காக அவற்றை பூமிக்கு கொண்டு வரவும் நாசா திட்டமிட்டுள்ளது. விண்வெளியில் மனிதர்கள் குடியேறும் முயற்சியில் நாசாவின் இந்த சாதனை ஒரு மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago