முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பரங்குன்றத்தில் வடிவேலு உருவ பொம்மை எரிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 27 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

திருப்பரங்குன்றம்,மார்ச்.- 27 - திருப்பரங்குன்றம் அருகே ஹார்விபட்டியில் தே.மு.தி.க.வினர் வடிவேலு உருவ பொம்மையை எரித்தனர்.  ஹார்விபட்டி தே.மு.தி.க. நகர செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 30 க்கும் மேற்பட்டோர் நடிகர் வடிவேலு உருவ பொம்மை எரித்து விட்டு சென்றனர்.  சில தினங்களுக்கு முன் திருவாரூரில் நடந்த தி.மு.க. பிரச்சார கூட்டத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை பற்றி தரக்குறைவாக வடிவேலு பேசினார். அதனால் நாங்கள் அவரது உருவ பொம்மையை எரித்தோம் என்று தே.மு.தி.க.வினர் கூறினர். இது குறித்து திருநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்