முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச டென்னிஸ்: மரின் ப்ரட்ரிச் சாம்பியன் பட்டம்

சனிக்கிழமை, 21 ஏப்ரல் 2012      விளையாட்டு
Image Unavailable

 

திருச்சி.ஏப்.22 - தமிழக டென்னிஸ் கழகமும், திருச்சி மாவட்ட டென்னிஸ் கழகமும் இணைந்து நடத்தும் சர்வதேச டென்னிஸ் போட்டி திருச்சியில் கடந்த 14ம்தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. தமிழகத்தில் முதல்முறை நடைபெறும் இந்த சர்வதேச டென்னிஸ் போட்டியில் இந்தியா, சிலி, செர்பியா, நெதர்லாந்து, குரோசியா, பெல்ஜியம், இத்தாலி, சுவிஸ் உள்ளிட்ட 12 க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்தும் இந்தியாவின் முன்னனி டென்னிஸ் விளையாட்டு வீரர்களும் இந்தப்போட்டியில் கலந்துக்கொண்டு விளையானர்.

இன்று நடைபெற்ற ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் குரோசியாவின் மரின் பிரட்ரிச்சும் செர்பியாவின் லேட்டாநோவிக்கும் மோதினர். முதல் செட்டில் செர்பிய வீரர் லேட்டாநோவிக் கைப்பற்றினார். இதனையடுத்து தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் குரோசிய வீரர் மரின் ப்ரட்ரிச்; செர்பிய வீரரை 4-6, 6-3, 7-6, என்ற நேர் செட்கணக்கில் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார்.

போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு தமிழ்நாடு டென்னிஸ் கழக துணைத்தலைவர் கார்த்திக் சிதம்பரம் பரிசுத்தொகையினையும் வெற்றிக்கோப்பையையும் வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்