முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தர பிரதேச சட்டசபையில் வரியில்லா பட்ஜெட் தாக்கல்

வெள்ளிக்கிழமை, 1 ஜூன் 2012      அரசியல்
Image Unavailable

 

லக்னோ. ஜூன். 2 - முதல்வர் அகிலேஷ் யாதவ்  தலைமையிலான சமாஜ்வாடி அரசு உத்தர பிரதேசத்தில்  வரியில்லா பட்ஜெட்டை  நேற்று தாக்கல் செய்தது. உத்தர பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த தேர்தலில் முலாயம் சிங் யாதவ் தலைமையிலான  சமாஜ்வாடி கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.  முதல்வராக முலாயம் சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் பதவி ஏற்றார்.

உத்தர பிரதேச சட்டசபையில் நேற்று தனது முதலாவது பட்ஜெட்டை முதல்வர் அகிலேஷ் யாதவ்  தாக்கல் செய்தார்.

நிதி இலாகாவையும் அவரே  வைத்திருப்பதால் அவரே  இந்த பட்ஜெட்டை  தாக்கல்  செய்தார்.

ரூ. 1,94,327 கோடிக்கு வருமானமும் ரூ.2,00,110 கோடிக்கு செலவினமும் கொண்ட இந்த பட்ஜெட்டை வரியில்லா பட்ஜெட்டாக அவர்  தாக்கல் செய்தார்.

இதன் மூலம் ரூ.5,783 கோடி  பற்றாக்குறை காட்டப்பட்டுள்ளது.

பல்வேறு வருமான மதிப்பீடுகள் மூலம் இந்த பற்றாக்குறை ரூ. 3323 கோடியாக  குறைக்கப்பட்டுள்ளது.

இநத பட்ஜெட்டை  அகிலேஷ் தாக்கல் செய்து பேசிய போது பகுஜன் சமாஜ்  கட்சியை  சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் சபையில் சற்று நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

பிறகு  பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் சபையிலிருந்து வெளி நடப்பு  செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்