முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிமிண்ட் நிறுவன இயக்குனரிடம் சி.பி.ஐ. துருவிதுருவி விசாரணை

புதன்கிழமை, 20 ஜூன் 2012      இந்தியா
Image Unavailable

ஐதராபாத், ஜூன். - 20 - ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி மீதான சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக இந்தியா சிமிண்ட்ஸ் நிறுவன மேலாண்மை இயக்குனரும், இந்திய கிரிக்கெட் வாரிய தலைவருமான சீனிவாசனிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் ஆஜராகுமாறு சி.பி.ஐ. அவருக்கு நோட்டீஸ் அளித்திருந்தது. அதனடிப்படையில் ஐதராபாத்தில் உள்ள தில்குஷா விருந்தினர் மாளிகையில் சீனிவாசன் ஆஜரானார். அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெகன்மோகன் ரெட்டியின் தந்தை ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி முதல்வராக இருந்த போது ஜெகனுக்கு சொந்தமான நிறுவனங்களில் இந்தியா சிமிண்ட்ஸ் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. இதற்காக அப்போது அரசிடம் இருந்து சில சலுகைகளை அந்நிறுவனம் பெற்றதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக சீனிவாசனிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போன்று வேறு சில சிமிண்ட் நிறுவனங்களும் ஜெகனுக்கு சொந்தமான நிறுவனங்களில் முதலீடு செய்ததன் மூலம் தண்ணீர் உள்ளிட்டவற்றின் ஒதுக்கீட்டில் சலுகை பெற்றதாக கூறப்படுகிறது. அந்நிறுவனங்களிடமும் சி.பி.ஐ. விசாரணை நடத்தவுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஜெகன்மோகன் ரெட்டியை ஏற்கனவே சி.பி.ஐ. கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்