முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அசாம் மாநில தேர்தல் 4 மணி நேரத்தில் 25 சதவீத ஓட்டுப்பதிவு

திங்கட்கிழமை, 4 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

 

கவுகாத்தி,ஏப்.- 5 - அசாம் மாநிலத்தில் சட்டசபைக்கு முதல் கட்டமாக 62 தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் முதல் 4 மணி நேரத்தில் 25 சதவீத ஓட்டுக்கள் பதிவாகின. 

அசாம் மாநிலத்தில் நேற்று முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது. இதில் 62 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற்றது. இதில் 4 மணி நேரத்தில் மட்டும் 25 சதவீதம் வரை பதிவாகியது. கரீம்கஞ்ச், ஜோர்ஹத், ஹப்லாங் மாவட்டங்களில் முதல் 4 மணி நேரத்தில் 35 முதல் 40 சதவீதம் வரை ஓட்டுக்கள் பதிவாகின. அதேசமயத்தில் தின்சுகியா மாவட்டத்தில் மிகவும் குறைவாக 11 சதவீத ஓட்டுக்கள் மட்டுமே பதிவாகி இருந்தன என்று தேர்தல் கமிஷன் தெரிவித்தது. ஜோர்ஹத் சட்டசபை தொகுதியில் முதல்வர் தரூண் கோகாய் அவரது மனைவி டோலி, மகன் கெளரவ், மத்திய அமைச்சர் பி.கே.ஹாண்டி, எம்.பி. ,தீப் கோகாய் ஆகியோர் ஓட்டுப்போட்டனர். ஆனால் பல தொகுதிகளில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் செயல்படவில்லை என்று புகார்கள் வந்தன. லாஹிம்பூர், நாவோபாய்சா,பொகஜன், திபு ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் 6 வாக்குச்சாவடிகளில் மின்னணு இயந்திரங்கள் பழுது அடைந்துவிட்டன என்று புகார் வந்தது. அதேசமயத்தில் ஹப்லாங் காவல் நிலையத்திற்கு உட்பட்ட 10 வாக்குச்சாவடிகளில் மக்கள் ஓட்டுப்போட செல்லாமல் புறக்கணித்தனர். மேலும் மலைப்பிரதேசத்தை சேர்ந்த சில அமைப்புகளும் தேர்தலை புறக்கணித்தன. தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நேற்று பிற்பகல் 2 மணி வரை ஓட்டுப்பதிவின்போது எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்