முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வேண்டுகோள்

செவ்வாய்க்கிழமை, 8 ஜனவரி 2013      இந்தியா
Image Unavailable

 

வாஷிங்டன், ஜன.9 - சர்வதேச எல்லைக்கோடு பகுதியில் துப்பாக்கியால் சுடுவதை  இந்தியாவும், பாகிஸ்தானும் நிறுத்திக்கொள்ள வேண்டும்  என்று அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது. இந்த பகுதியில் துப்பாக்கியால் சுடுவதை நிறுத்திவிட்டு,  இணக்கமான நிலையில் இருக்க  இரு நாடுகளும் முயற்சிக்க வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது என்று அமெரிக்க அதிகாரி விக்டோரியா நூலண்ட் கூறியுள்ளார்.

சர்வதேச எல்லைக்கோட்டை தாண்டி பாகிஸ்தான் துப்பாக்கியால் சுடுவதாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்து அவர் கூறியதாவது:  

பாகிஸ்தான் குண்டு வீசியதில் ஒரு வீடு அழிந்தது. இதையடுத்து இந்திய துருப்புகள் பதிலுக்கு திருப்பி சுட்டதாக இந்தியா தெரிவித்தது என்றும் அவர் கூறினார். காஷ்மீர் பிரச்சனையில் இரு நாடுகளும் நேர்மையான வழியை கடைபிடித்து நடக்க வேண்டும். காஷ்மீரில் சர்வதேச எல்லைக்கோட்டை தாண்டுவதாக செய்திகள் வந்தால் நாங்கள் கவலைப்படுவோம். அதே நேரத்தில் அதைத் தடுக்க முயற்சிப்போம்என்றும் அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்