முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை டெஸ்ட்: வெற்றியின் விழிம்பில் இந்திய அணி

செவ்வாய்க்கிழமை, 26 பெப்ரவரி 2013      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, பிப். 26 - ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சென்னையில் நடைபெற்று வரும் முதலாவது கிரிககெட் டெஸ்ட் போட்டியில் இந்திய  அணி வெற்றி பெறும் நிலையில் உள்ளது. இந்தப் போட்டியில் இந்தியாவின் சுழ ற் பந்து வீரர்களான அஸ்வின், ஹர்பஜ ன் சிங் மற்றும் ஜடேஜா மூவரும் இணைந்து சிறப்பாக பந்து வீசி ஆஸி. விக்கெட்டை சூறையாடினர். 

ஆஸ்திரேலிய அணி தற்போது 2- வது இன்னிங்சில் கடைசி விக்கெட்டுடன் ஆடி வருகிறது. பேட்ஸ்மேன்களில் ஹென்ரிக்ஸ் ஒருவர் மட்டுமே தாக்குப் பிடித்து ஆடி வருகிறார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிக ளுக்கு இடையே பார்டர் மற்றும் கவா ஸ்கர் கோப்பைக்கான முதலாவது டெ ஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தி ல் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத் தில் கடந்த 4 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய ஆஸி. அணி முதல் இன்னிங்சி ல் 380 ரன்னை எடுத்தது. அந்த அணி தர ப்பில், கேப்டன் கிளார்க் 130 ரன்னையும், ஹென்ரிக்ஸ் 68 ரன்னையும், வார்னர் 59 ரன்னையும், கோவன் 29 ரன்னையும், வாட்சன் 28 ரன்னையும், எடுத்தனர். 

பின்பு முதல் இன்னிங்சை ஆடிய இந்தி ய அணி 154.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 572 ரன்னை எடுத்த து. ஒரு வீரர் இரட்டை சதமும், ஒரு வீர ர் சதமும் அடித்தனர். இந்திய அணி தரப்பில், கேப்டன் தோ னி தனது முதலாவது டெஸ்ட் இரட்டை சதத்தை அடித்தார். அவர் 265 பந் தில் 224 ரன்னை எடுத்தார். இதில் 24 பவுண்டரியும், 6 சிக்சரும் அடக்கம். 

விராட் கோக்லி 206 பந்தில் 107 ரன் எடு த்தார். இதில் 15 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். தவிர, டெண்டுல்கர் 81 ரன்னும், புஜாரா 44 ரன்னும், பி. குமார் 38 ரன்னும் எடுத்தனர்.அடுத்து 2- வது இன்னிங்சை ஆடிய ஆஸி. அணி 4 -வது நாள் ஆட்ட நேர முடிவில் 2- வது இன்னிங்சில் 84 ஓவ ரில் 9 விக்கெட் இழப்பிற்கு 232 ரன்னை எடுத்து உள்ளது. 

ஆஸ்திரேலிய அணி தரப்பில், ஹென்ரி க்ஸ் அதிகபட்சமாக, 124 பந்தில் 74 ரன் னை எடுத்து ஆட்டம் இழக்காமல் இரு க்கிறார். இதில் 6 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அடக்கம். லியான் 8 ரன்னுடன் இருக்கிறார். முன்னதாக துவக்க வீரர் கோவன் 32 ரன்னிலும், கேப்டன் கிளார்க் 31 ரன் னிலும், வார்னர் 23 ரன்னிலும், வாட்சன் 17 ரன்னிலும், ஆட்டம் இழந்தனர். 

இந்திய அணி சார்பில், அஸ்வின் 90 ரன் னைக் கொடுத்து 5 விக்கெட் எடுத்தார். ஹர்பஜன்சிங் 55 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். ஜடேஜா 68 ரன் னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். 

ஆஸ்திரேலியஅணி தற்போது 40 ரன் முன்னிலையில் உள்ளது. கைவசம் 1 விக்கெட் தான் உள்ளது. இன்று ஆட்ட த்தின் கடைசி நாளாகும். இந்திய அணியின் வெற்றி உறுதியாகி விட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்