முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாம்பியன்ஸ் கோப்பை: இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியது

ஞாயிற்றுக்கிழமை, 16 ஜூன் 2013      விளையாட்டு
Image Unavailable

 

பிர்மிங்ஹாம், ஜூன். 17 -  ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பிர்மிங்ஹாம் நகரில் நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. இந்திய அணி இதுவரை 3 லீக்கில் ஆடி மூன்றிலும் வெற்றி பெற்று அரை இறு திக்குள் நுழைந்துள்ளது குறிப்பிடத்தக் கது. 

முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வையும், 2 - வது போட்டியில் மே.இ.தீவு அணியையும், 3 -வது போட்டியில் பாகிஸ்தான் அணியையும் வென்றுள்ளது. 

இந்தப் போட்டியில் இந்தியஅணி தரப் பில், துவக்க வீரர் ஷிகார் தவான் அதிர டியாக ஆடி அணியை வெற்றிப் பாதை க்கு அழைத்துச் சென்றார். அவருக்குப் பக்கபலமாக, ரோகித் சர்மா, விராட்கோக்லி, மற்றும் திணேஷ்கார்த்திக் ஆகியோர் ஆடினர். 

முன்னதாக பெளலிங்கின் போது, புவனேஷ்வர்குமார், இஷாந்த் சர்மா அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் அடங்கிய கூட்டணி சிறப்பாக பந்து வீசி பாக். அணியின் ரன் ரேட்டைக்கட்டுப்படுத்தியது. 

இந்தப் போட்டியின் போது, முதலில் பாக். அணியின் பேட்டிங்கிலும், பின்பு இந்தியஅணியின் பேட்டிங்கிலும் மழை குறுக்கிட்டது. இதனால் இறுதி யில் டக் வொர்த் லீவிஸ் முறை கடை பிடிக்கப்பட்டது.

சாம்பியன்ஸ் கோப்பை போட்டியின் 10 - வது லீக் ஆட்டம் பிர்மிங்ஹாம் நகரில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடந்தது. இதில் குரூப் பி பிரிவை ச் சேர்ந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. 

முதலில் களம் இறங்கிய பாகிஸ்தான் அணிக்கு 40 ஓவர்கள் நிர்ணயிக்கப்பட்டது. இறுதியில் அந்த அணி 39.4 ஓவரி ல் அனைத்து விக்கெட்டையும் இழந்து 165 ரன்னை மட்டுமே எடுத்தது. 

பாகிஸ்தான் அணி தரப்பில், ஆசாத் சபீக் அதிகபட்சமாக 57 பந்தில் 41 ரன் னை எடுத்தார். இதில் 3 பவுண்டரி அடக்கம். தவிர, கம்ரான் அக்மல் 21 ரன்னையும், மொகமது ஹபீஸ் 27 ரன் னையும், கேப்டன் மிஸ்பா 22 ரன்னையும், சோயிப் மாலிக் 17 ரன்னையும், உமர் அமின் 27 ரன்னையும் எடுத்தனர். 

இந்திய அணி சார்பில், முன்னணி வேக ப் பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார் 19 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, இஷாந்த் சர்மா, அஸ்வின் மற்றும் ஜடேஜாஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர். 

பின்பு மழை பெய்ததால் இந்தியஅணி 22 ஓவரில் 102 ரன்னை எடுத்தால் வெற் றி பெறலாம் என்ற இலக்கு நிர்ணயிக்க ப்பட்டது. 

அடுத்து களம் இறங்கிய இந்திய அணி 19.2 ஓவரில் 2 விக்கெட்இழப்பிற்கு 102 ரன்னை எடுத்தது. இதனால் இந்த ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித் தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்தியஅணி தரப்பில் துவக்க வீரர் ஷிகார்தவான் அதிகபட்சமாக, 41 பந்தி ல் 48 ரன் எடுத்தார். இதில் 5 பவுண்டரி அடக்கம். தவிர, ரோகித்சர்மா 18 ரன் னையும், விராட்கோக்லி 22 ரன்னையும், திணேஷ் கார்த்திக் 11 ரன்னையும் எடுத்தனர். 

பாகிஸ்தான் அணி சார்பில், வகாப் ரியாஸ் 20 ரன்னைக் கொடுத்து 1 விக்கெட்எடுத்தார். சயீத்அஜ்மல் 29 ரன்னைக் கொடுத்து 1 விக்கெட்எடுத்தார். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக புவ னேஷ்வர் குமார் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்