எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மதுரை,ஜூலை 3 - என்.எல்.சி பங்குகளை விற்க முயற்சிக்கும் மத்திய காங்கிரஸ் அரசை கண்டித்து மதுரையில் அ.தி.மு.க வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டனர். என்.எல்.சி யின் 5 சதவீத பங்குகளை விற்க முயற்சிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும்,பங்குகளை விற்றால் அதை தமிழக அரசுக்கு வழங்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கடிதம் எழுதியிருந்தார். இதற்கு பிரதமர் மன்மோகன்சிங் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் என்.எல்.சிபங்குகளை விற்க முயற்சிக்கும் மத்திய காங்கிரஸ் அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.இதைத் தொடர்ந்து நேற்று (2-ம் தேதி) தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரையில் மதுரை மாநகர்,புறநகர் மாவட்ட கழகம் சார்பில் ஸ்காட் ரோட்டில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட அவைத் தலைவர் புதூர் கே.துரைப்பாண்டியன்,புறநகர் மாவட்ட அவைத் தலைவர் சி.துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா, புறநகர் மாவட்ட செயலாளர் எம்.முத்துராமலிங்கம், எம்.எல்.ஏ க்கள் ஏ.கே.போஸ்,மேலூர் ஆர்.சாமி, கே.தமிழரசன்,எம்.வி.கருப்பையா ஆகியோர் வரவேற்று பேசினர்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க மாநில சிறு பான்மையினர் நல பிரிவு தலைவர் ஜஸ்டின் செல்வராஜ் கலந்து கொண்டு தலைமை வகித்து பேசினார்.அப்போது அவர் பேசியதாவது,
தமிழகத்தில் முதல்வர் அம்மா பொற்கால ஆட்சி நடத்தி வருகிறார்.ஆனால் மத்திய அரசு, தமிழகத்தை வஞ்சிப்பது ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழர்களின் உரிமைகளை நிலைநாட்ட சட்ட ரீதியாக போராடி வெற்றி கண்டு வருகிறார் முதல்வர் அம்மா.ஆனால் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழகத்திற்கு அனைத்து தரப்பிலும் எதிராகவே செயல்படுகிறது.நெய்வேலி சுரங்க விவகாரத்தில் 5 சதவீத பங்குகளை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது.அப்படி விற்பதாக இருந்தால் இதனை தமிழக அரசு வாங்கி கொள்ள தயாராக இருக்கிறது என்று முதல்வர் அம்மா அறிவித்த பிறகும் மத்திய அரசு மவுனம் காட்டி வருகிறது. மத்திய அரசு உடனடியாக தனது மவுனத்தை கலைத்து முதல்வர் அம்மாவின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசிடம் 5 சதவீத பங்குகளை உடனடியாக ஒப்படைக்க வேண்டும்.தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட போராடி வரும் அம்மாவிற்கு தமிழக மக்கள் துணை நின்று 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் அமோக வெற்றியை தேடித் தர வேண்டும்.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் ஜாதி,மதம், பார்க்காமல் அனைவரும் ஒன்று பட்டு முதல்வர் அம்மாவின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.இதனை தொடர்ந்து மேயர் ராஜன்செல்லப்பா ஆர்ப்பாட்ட கோஷங்களை எழுப்ப அதனை அ.தி.மு.க வினர் திரும்ப சொல்லி முழங்கிய கோஷங்கள் வின்னை முட்டியது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் அ.மா.பரமசிவம், வளர்மதி ஜெபராஜ், முன்னாள் எம்.பி.முத்துமணி, முன்னாள் எம்.எல்.ஏ வி.ஆர்.ராஜாங்கம், மாநில எம்.ஜி.ஆர் மன்ற துணைச்செயலாளர் எம்.எஸ்.பாண்டியன் மண்டல தலைவர்கள் பெ.சாலைமுத்து, கே.ஜெயவேல்,கே.ராஜாபாண்டியன், அணி செயலாளர்கள் எஸ்.டி.ஜெயபாலன்,கா.டேவிட் அண்ணாத்துரை,ஷ.ராஜலிங்கம்,பெ.இந்திராணி,ஏ,ராஜீவ்காந்தி,தமிழ்செல்வன், டி.வினோத்குமார், புதூர் சுந்தரா, தொகுதி கழக செயலாளர்கள் மா,இளங்கோவன்,கோ.பாரி, எஸ்.முருகேசன், எம்.ரவிச்சந்திரன், பகுதி கழக செயலாளர்கள் எம்.என்.முருகன், வி.கே.எஸ். மாரிச்சாமி, முத்திருளாண்டி,எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் வி.கே.சாமி, மாநில பொதுக் குழு உறுப்பினர்கள்அண்ணாநகர் முனியசாமி, சண்முகவள்ளி, எல்லீஸ் நகர் ஏ.இந்திரா, கவுன்சிலர்கள் புதூர் ஐ.அபுதாகீர், பூமிபாலகன், எம்.கேசவபாண்டியம்மாள், கு.திரவியம், முத்துக்கருப்பன், கார்னர் பாஸ்கர், வீரணன், கண்ணகி பாஸ்கரன், ராணி போஸ்,குமுதா, பாகச் செயலாளர்கள் யுகா ராஜா, பாஸ்கரன், கோட்டைச்சாமி, மற்றும் வழக்கறிஞர் ரமேஷ்,நிலையூர் முருகன், மின்வாரியம் கெளதமன்,மிசா செந்தில், ஆட்டோ விஜயன், பார்த்திபன், விசுவலிங்கம், மகளிரணி தெய்வம் கணபதி, தேனம்மாள், எம்.கல்யாணி, புஷ்பா, எல்டா பாஸ்டின், சுகுணா, பாண்டியம்மாள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 11-05-2025
11 May 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 11-05-2025
11 May 2025 -
அன்னையர் தினம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
11 May 2025சென்னை : நாடு முழுவதும் நேற்று (மே 11) அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது.
-
தமிழ்நாட்டில் வரும் 14, 15ம் தேதிகளில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
11 May 2025சென்னை : தமிழகத்தில் வரும் மே 14,15ம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது : பிரதமர் மோடி பெருமிதம்
11 May 2025புதுடெல்லி : தேசிய தொழில்நுட்ப தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணி நாடாக வளர்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்
-
பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் தமிழ்நாடு முதலிடம் : தமிழக அரசு பெருமிதம்
11 May 2025சென்னை : பொருளாதார வளர்ச்சி, உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை, தொழில் ஒப்பந்தங்கள், மின்னணு ஏற்றுமதி, வேலைவாய்ப்புகளை வழங்குதல் என பலவற்றில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிட
-
தமிழ்நாட்டின் முக்கிய அணைகளில் அடுத்த வாரம் சிவில் பாதுகாப்பு ஒத்திகை
11 May 2025சென்னை : தமிழ்நாட்டின் முக்கிய அணைகளில் அடுத்த வாரம் சிவில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
5 நாட்கள் பயணமாக இன்று ஊட்டி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
11 May 2025ஊட்டி : 5 நாட்கள் பயணமாக இன்று ஊட்டி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அவர் வரும் 15-ம் தேதி அங்கு மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்.
-
பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்: பிரதமருக்கு கார்கே, ராகுல் மீண்டும் கடிதம்
11 May 2025புதுடெல்லி : பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்க உடனடியாக பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி ஆகி
-
ஆபரேஷன் சிந்தூர் இந்திய ராணுவ உறுதியின் சின்னம் : மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு
11 May 2025லக்னோ : ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் அரசியல், சமூக மற்றும் ராணுவ மனஉறுதியின் சின்னம் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
-
இந்தியா - பாக். போர் நிறுத்தம் எதிரொலி: எல்லையில் மெதுவாகதிரும்பும் இயல்புநிலை
11 May 2025புதுடெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே நேற்று முன்தினம் மாலை போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.