முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கற்பழிப்புப் புகாரில் சிக்கிய மத்தியபிரதேச அமைச்சர் ராஜினாமா

வெள்ளிக்கிழமை, 5 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

போபால், ஜூலை.6 - கற்பழிப்பு புகாரில் சிக்கிய மத்தியபிரதேச நிதி அமைச்சர் ராகவ்ஜி.  தனது நிதிஅமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். வேலியே பயிரை மேய்ந்த சம்பவம் மத்தியபிரதேசத்தில் நடந்துள்ளது. மத்தியபிரதேசத்தில் முதலமைச்சர் சிவ்ராஜ்சிங் சவுகான் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.இவரது அமைச்சரவையில் ராகவ்ஜி என்பவர் நிதி அமைச்சராக உள்ளார். இவரது வயது 79. இவர் மீது கற்பழிப்புப் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முன் வந்தார். அதன்படி இவர் தனது ராஜினாமா கடிதத்தை முதலமைச்சர் சிவாரஜ் சவுகானிடம் வழங்கினார்.

79 வயதான அமைச்சர் ராகவ்ஜி மீது கற்பழிப்பு புகார் கூறியவர் வேறு யாருமல்ல. அவர் வீட்டு வேலைக்காரப் பெண் தான், அமைச்சர் மீது  காவல் நிலையத்தில் அவர் கற்பழிப்புப்  புகாரை கொடுத்துள்ளார். இதுதொடர்பான ஆபாசப்பட கேசட்டை அவர் வழங்கியுள்ளார். இதையடுத்து ராகவ்ஜி தனது பதவி விலகல் கடிதத்தை முதல் அமைச்சரிடம் வழங்க, அதை அவர் கவர்னருக்கு சிபாரிசு செய்து அனுப்பினார். வேலைக் காரப் பெண் கொடுத்த சி.டி.ஆபாசம் நிறைந்தது. அதில் என்னை ராகவ்ஜி கற்பழித்தார் என்று கூறியதற்கான ஆதாரம் உள்ளது என்றும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார். 

 நிதி அமைச்சரான ராகவ்ஜி கடந்த 2004-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 10 ஆண்டுகளாக பட்ஜெட்டை தாக்கல் செய்து வந்துள்ளார். இதற்கிடையில் அவர் கற்பழிப்புப் புகாரில் சிக்கியுள்ளார். ராகவ்ஜி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதை அடுத்து, நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ஜயந்த் மாளவியாவை நிதி இலாகா பொறுப்பை கவனிக்குமாறு சவுகான் கேட்டுக்கொண்டுள்ளதாக அதிகாரப்பூர்வ செய்திகள் தெரிவித்தன. 

இது துரதிருஷ்டவசமானது என்றும், லஞ்சத்தை விட இது மோசமான ஊழலாகும் என்று மத்தியபிரதேச சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அஜய்சிங் கூறினார். சாதாரண சாமானியன் தவறு செய்தால் கண்டிக்கலாம். ஆனால் அமைச்சரே தவறு செய்தரல் யாரிடம் முறையிடுவது?

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்