முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

200-வது டெஸ்ட் போட்டியுடன் சச்சின் ஓய்வு பெறுகிறார்

வியாழக்கிழமை, 10 அக்டோபர் 2013      விளையாட்டு
Image Unavailable

 

மும்பை, அக். 11 - அடுத்த மாதம் நடக்கவுள்ள 200 வது டெஸ்ட் போட்டியுடன் பிரபல கிரிக்கெட் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளித்துள்ளது. 

கிரிக்கெட் உலகில் பல்வேறு சாதனைகளை படைத்து உலக அளவில் பாராட்டுக்களை குவித்தவர் சச்சின் டெண்டுல்கர். நட்சத்திர வீரர் என்ற அடைமொழிக்கு சொந்தக்காரர் இவர். 1989 ம் ஆண்டு பாகிஸ்தானில் கராச்சியில் நடந்த டெஸ்ட் போட்டியில் முதன் முதலில் கால்பதித்தவர் சச்சின் டெண்டுல்கர். தான் விளையாடிய பல்வேறு போட்டிகளில் சதங்களை குவித்தவர் சச்சின் டெண்டுல்கர். சதங்களை குவித்ததன் மூலமும் பல போட்டிகளில் வெற்றி வாகை சூடியதன் மூலமும் இந்த நாட்டுக்கே பெருமை சேர்த்தவர் சச்சின் டெண்டுல்கர். இவர் ஏற்கனவே ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்து விட்டார். அதன் பிறகு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வந்தார். தற்போது அடுத்த மாதம் நடைபெறவுள்ள 200 வது டெஸ்ட் போட்டியுடன் தான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப் போவதாக சச்சின் டெண்டுல்கர் தற்போது அறிவித்துள்ளார். இந்த முடிவை தாம் முறைப்படி கிரிக்கெட் வாரியத்துக்கு தெரிவித்து விட்டதாகவும் சச்சின் டெண்டுல்கர் கூறினார். இதன் மூலம் அவரது 24 வருட சகாப்தம் தற்போது முடிவுக்கு வருகிறது என்பதை நினைத்து ரசிகர்கள் வேதனை அடைந்துள்ளனர். சச்சினின் இந்த முடிவு அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் பெரும் ஏமாற்றத்தையும் தந்துள்ளது.  

 

எக்ஸ்பிரசை, பேசஞ்சராக மாற்றியவர் டெண்டுல்கர்

 

பாகிஸ்தான் அணியின் சிறந்த பந்து வீச்சாளராக இருந்தவர் ஷகீல் அக்தர். ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் இவரின் பந்தை எதிர்கொள்வதற்கு உலகில் உள்ள எல்லா அணி வீரர்களுமே அஞ்சிய நேரத்தில் மாஸ்டர் பேட்ஸ்மேனாக களமிறங்கி பாகிஸ்தான் மண்ணிலேயே ஷகில் அக்தரின் பந்துகளை எதிர்கொண்டு சிக்ஸர்களும், பவுண்டரிகளுமாக விளாசி ராவல்பிண்டி எக்ஸ்பிரசை ராவல்பிண்டி பயணிகள் ரயிலாக மாற்றிய பெருமை சச்சின் டெண்டுல்கரையே சாரும். கடைசியில் டெண்டுல்கர் கிரிக்கெட்டின் ஜாம்பவானாக திகழ்ந்து கொண்டிருந்த நேரத்தில் ஷகீல் அக்தர் அணியில் இருந்தே நீக்கப்பட்டார் என்பதுதான் வரலாறு.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்