தின பூமி
முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தே.ஜ. கூட்டணியில் சேர எடியூரப்பா முடிவு

ஞாயிற்றுக்கிழமை, 20 அக்டோபர் 2013      இந்தியா
Image Unavailable

 

பெங்களூர், அக். 21 - கர்நாடகாவில் முதல் மந்திரியாக இருந்த எடியூரப்பா ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியதால் பதவி இழந்தார். மீண்டும் அவர் முதல்வராக பா.ஜ.க. அனுமதிக்கவில்லை. இதனால் அவர் பா.ஜ.க.வில் இருந்து விலகி கர்நாடக ஜனதா கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கினார். கடந்த ஏப்ரலில் நடந்த சட்டசபை தேர்தலில் அவரது கட்சி தோல்வியை தழுவியது. மேலும் பல தொகுதிகளில் பா.ஜ.க. வேட்பாளர்கள் தோல்வியடைய எடியூரப்பா கட்சி காரணமாக இருந்தது. இதனால் பா.ஜ.க.வில் மீண்டும் அடைக்கலம் புகலாமா என்று எடியூரப்பா ஆலோசித்தார். ஆனால் பா.ஜ.க. தலைவர்கள் அதில் ஆர்வம் காட்டவில்லை. இதனிடையே நேற்று எடியூரப்பா ஆலோசனை கூட்டம் நடத்தினார். அதில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெறலாம் என்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இது குறித்து பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானிக்கு கடிதம் எழுதி பா.ஜ.க. கூட்டணியில் சேர கர்நாடக ஜனதா கட்சி தயாராக உள்ளது என்று விருப்பம் தெரிவித்துள்ளார். பா.ஜ.க. தேசிய தலைவர் ராஜ்நாத்சிங், எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோருக்கும் நகல் அனுப்பி உள்ளார். கர்நாடகாவில் மொத்தம் 29 தொகுதிகள் உள்ளன. இவற்றில் 10 தொகுதிகளில் பா.ஜ.க. ஆதரவுடன் போட்டியிட எடியூரப்பா விருப்பம் தெரிவித்துள்ளார். எனவே கர்நாடகாவில் பா.ஜ.க. எடியூரப்பா கட்சிகளிடையே கூட்டணி ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago