முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியர்கள், அமெரிக்கர்களுக்கு பாடம் கற்றுத் தருகின்றனர்

ஞாயிற்றுக்கிழமை, 27 அக்டோபர் 2013      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், அக்,28 - இந்தியாவிலிருந்து வரும் லட்சக்கணக்கான மக்கள் கணிதத்திலும், தொழில் நுட்பத்திலும் நமக்கு பாடம் கற்றுத் தருகின்றனர் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.  

நியூயார்க்கில் உள்ள புருக்லின் கல்லூரியில் மாணவர்களிடம் அவர் பேசியது: அமெரிக்காவின் முந்தைய தலைமுறையினர் பொருளாதார ரீதியில்  முன்னிலை வகித்தனர். அப்போது அவர்களுக்கு எவ்விதப் போட்டியும் இல்லை. இப்போது இந்தியா,  சீனா ஆகிய நாடுகளிலிருந்து லட்சக்கணக்கானவர்கள் அமெரிக்கா வருகின்றனர். அவர்கள் நம்முடன் போட்டி போடுகின்றனர். இது ஒவ்வொரு நாளும் நிகழ்கிறது.

ஆண்டுதோறும் அவர்கள் கணிதம், அறிவியல், தொழில் நுட்பம் என பல துறைகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதன்மூலம் அவர்கள் நமக்குக் கற்றுத் தருகின்றனர். இதுபோல் நாமும் அதிக அளவு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும். நாம் 21_ம் நூற்றாண்டில் வாழந்து வருகிறோம். அதற்கு ஏற்ப உலகப் பொருளாதாரம் வளர்ந்துள்ளது. வேலைக்காக எங்கு வேண்டுமானாலும் செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. 

 இப்போதுள்ள நிறுவனங்கள் கல்வியில் சிறந்தவர்களைத்தான் தேர்வு செய்கின்றன. உலகில் எங்கு வாழந்தாலும் அவர்களுக்கு நல்ல வேலை மற்றும் சம்பளம் கிடைக்கிறது. ஏற்கெனவே அதுபோன்ற நிலையை நாம் அடைந்திருந்தாலும் மேலும் முன்னேற நாம் கடுமையாக உழைத்து வெற்றிபெற வேண்டும்.

உலகப் பொருளாதாரம் மற்றும் அவற்றை எதிர்கொள்வது குறித்து வளரும் தலைமுறையினருக்குக் கற்றுத் தர வேண்டும். அ%ரிக்காவில் உயர் கல்வி கட்டணம் அதிகரித்து வருகிறது. அனைவரும் உயர் கல்வி கற்கும் வகையில் இன்னும் சில மாதங்களில் கல்லூரி கட்டணங்களை குறைக்க முயற்சி எடுக்கப்படும். தேவை.ற்ற செலவினங்களைக் குறைத்து நம் நாட்டுக்கு உதவும் கல்வி அறிவியல் ஆராய்ச்சி உள்கட்டமைப்பு வசதிகளைக் குறைத்து சாலைகள் மேம்பாலங்கள் அமைக்க  அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம் என்று ஒபாமா தெரிவித்துள்ளார்.    

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்