முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மின்சாரம் தாக்கி உயிரிழந்த 4 பேர் குடும்பங்களுக்கு நிதியுதவி

வெள்ளிக்கிழமை, 20 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.21 - பல்வேறு பகுதிகளில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 4 பேர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும், தெரிவித்துள்ள முதலமைச்சர் ஜெயலலிதா, அவர்களுக்கு தலா ரூ.1 லட்சம்  நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:_

13.11.2013 அன்று கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், பூவாணிக்குப்பம் தெற்கு கிராமம் அருகே வயல் பகுதிக்குச் செல்லும் போது அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்ததால் பூவாணிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சுப்புராயன் மகன் சக்கரவர்த்தி14.11.2013 அன்று  சென்னை, வால்டாக்ஸ் சாலையில் தனியார் பட்டறையில் வேலை செய்து கொண்டிருந்த போது, கால் தவறி மின்மாற்றியில் விழுந்து  காந்திபுரம், திடீர் நகர் பகுதியைச் சேர்ந்த  ஜெயகாந்தன் என்பவரின் மகன் ராஜா 15.11.2013 அன்று காஞ்சிபுரம் மாவட்டம், சோழிங்கநல்லூர் வட்டம்,

பெரும்பாக்கம் கிராமத்தில் கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்த போது அருகிலிருந்த  மின்சார கம்பி உடலில் பட்டு, பெரும்பாக்கம் கிராமம், நேசமணி நகரைச்  சேர்ந்த முனுசாமி மகன் சின்னதுரை,23.11.2013 அன்று திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் வட்டம், வானகரம் கிராமம், ஆண்டாள் நகரில் பதாகை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் போது அருகிலிருந்த மின்சார கம்பியை மிதித்தால், வானகரம் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் ஆகியோர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.    

மின்சாரம் தாக்கி  உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்த துயர சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா  ஒரு லட்சம் ரூபாய்  வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். 

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்