முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனிமொழி - ராசாவுக்கு எதிராக விரைவில் குற்றப் பத்திரிக்கை

புதன்கிழமை, 2 ஏப்ரல் 2014      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,ஏப்.3 - நாட்டையே உலுக்கிய ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலில் கறுப்புப்பணம் விவகாரம் தொடர்பான வழக்கில் தி.மு.க. முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் கருணாநிதி மகள் கனிமொழிக்கு எதிராக மத்திய அமலாக்கத்துறை விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் தொடர்பான விசாரணையின்போது தி.மு.க. தலைவர் கருணாநிதியின் குடும்பத்தினரால் நடத்தப்பட்டு வரும் கலைஞர் டி.வி.க்கு பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து ரூ.214 கோடி பெறப்பட்டிருப்பது தெரியவந்தது. ஆனால் இதை கடனாகத்தான் பெற்றோம். அதை திருப்பி தந்துவிட்டோம் என்று கலைஞர் டி.வி. நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இருப்பினும் இது தொடர்பாக கறுப்புப்பண மோசடி பிரிவுகளின் கீழ் மத்திய அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில்தான் கனிமொழி மற்றும் ராசா உள்ளிட்டோருக்கு எதிராக மத்திய அமலாக்கத்துறை விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யலாம் என தெரிகிறது. இதுகுறித்து அமலாக்கத்துறை வட்டார தகவல்கள் கூறுகையில் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தயாரிப்பது தொடர்பான பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டன. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது தொடர்பாக மத்திய சட்ட அமைச்சகத்திடம் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு சுப்ரீம்கோர்ட்டின் கண்காணிப்பில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஆ.ராசா, கனிமொழியிடம் குறுக்கு விசாரணை நடத்துவதற்காக சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் 1718 கேள்விகளை ஏற்கனவே தயாரித்து வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்