முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெனாலிராமன் படத்துக்கு தடை இல்லை: ஐகோர்ட்டு

புதன்கிழமை, 16 ஏப்ரல் 2014      சினிமா
Image Unavailable


சென்னை, ஏப்.17 - நடிகர் வடிவேலு நடித்து வரும் 18_ம் தேதி வெளிவர இருக்கும் தெனாலிராமன் படத்துக்கு தடை இல்லை என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு தெலுங்கு மக்கள் பேரவையின் நிறுவனர் தலைவர் பாலகுருசாமி, தமிழ்நாடு தெலுங்கு யுவசக்தி அமைப்பின் தலைவர் கே.ஜெகதீஸ்வர ரெட்டி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:_
நடிகர் வடிவேலு நடித்துள்ள 'தெனாலிராமன்' என்ற படத்தை ஏ.ஜி.எஸ். எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில், சக்கரவர்த்தி கிருஷ்ணதேவராயரை நகைச்சுவையாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணதேவராயர் வரலாற்றின் உண்மைகளை மறைக்கப்பட்டு எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் வெளியானால், தமிழகத்தில் தேவையில்லாத சாதி மோதல் ஏற்பட்டு, சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்த படத்தை தெலுங்கு மக்கள் பிரதிநிதிகளுக்கு திரையிட்டு காட்டிய பின்னர், படத்தை வெளியிட வேண்டும் என்று உத்தரவிடவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், எம்.சத்தியநாராயணன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏ.ஜி.எஸ். எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தாக்கல் செய்த பதில் மனுவில், 'தெனாலிராமன் படத்தின் கதை கிருஷ்ணதேவராயர் பற்றியது கிடையாது' என்று கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து நீதிபதிகள், 'இந்த திரைப்படத்தை திரையிடும்போது, யாருடைய மனதையும் புண்படுத்தும் விதமாக இந்த படத்தின் காட்சிகள் இடம் பெறவில்லை என்று அறிவிப்பு வெளியிடவேண்டும். இந்த மனுவை தள்ளுபடி செய்கிறேன்' என்று உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்