முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தடையை எதிர்த்து பாக். கிரிக்கெட் வீரர்கள் அப்பீல்

திங்கட்கிழமை, 28 பெப்ரவரி 2011      தமிழகம்
Image Unavailable

 

கராச்சி, பிப்.28 - சர்வதேச கிரிக்கெட் சங்கத்தால் தடை செய்யப்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் மீதான தடையை நீக்கக்கோரி அப்பீல்  செய்துள்ளனர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மீது சூதாட்ட புகார் தொடர்ந்து எழுப்பப்படுவதும் அதற்காக அவர்கள்  தண்டிக்கப்படுவதும் ஒரு தொடர்கதையாகிவிட்டது. அந்த அணி கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது அங்கு சில வீரர்கள் சூதாட்ட புகாரில் சிக்கினர். இதையடுத்து அந்த அணியின் விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மல் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இந்த புகார் குறித்து விசாரிக்கப்பட்டனர். அடுத்ததாக பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோதும் இதேபோல் அந்த அணி வீரர்கள் மீது சூதாட்ட புகார்கள் மற்றும் லஞ்ச புகார்கள் எழுந்தன. அந்த அணியின் கேப்டன் சல்மான் பட், வேகப்பந்துவீச்சாளர்கள் முகமது ஆசிப், முகமது ஆமிர் ஆகியோர் மீதான இந்த  புகார்கள் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தால் விசாரிக்கப்பட்டு அவர்களுக்கு தண்டனையும் வழங்கப்பட்டது. 

இதன்படி சல்மான்பட், முகமது ஆசிப் ஆகியோருக்கு தலா 5 ஆண்டுகாலம் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது. முகமது ஆமிருக்கு 7 ஆண்டுகால தடை விதிக்கப்பட்டது. ஆனால் சல்மான் பட் மற்றும் முகமது ஆசிப் ஆகியோருக்கு இந்த தண்டனை பிற்காலத்தில் அவர்களின் நன்னடத்தை மூலம் குறையவும் வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் தடை விதிக்கப்பட்ட வீரர்கள் மூவரில் சல்மான் பட், முகமது ஆசிப் ஆகியோர் தங்கள் மீதான தடையை நீக்கக்கோரி அப்பீல் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். முகமது ஆமிர் தனியாக அப்பீல் மனுவை தாக்கல் செய்திருக்கிறார். இந்த தகவல்களை முகமது ஆசிப்பிற்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்