முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமருடன் வங்கதேசம் செல்ல மம்தா பானர்ஜி மறுப்பு

செவ்வாய்க்கிழமை, 6 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,செப்.6 - பிரதமர் மன்மோகன் சிங்குடன் வங்கதேச தலைநகர் டாக்காவுக்கு செல்ல மேற்குவங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மறுத்துவிட்டார். இந்தியாவின் மிகவும் நெருங்கிய அண்டை நாடு வங்கதேசம். இந்தியாவின் முயற்சியால்தான் வங்கதேசம் உருவாகியது. அதனால் மனிதாபிமான முறையில் சில பிரச்சினைகளில் வங்கதேசத்திற்கு இந்தியா விட்டுக்கொடுக்க வேண்டியுள்ளது. அதன் அடிப்படையில் இருநாடுகளுக்கிடையே தீஸ்தா நீர் பங்கீடு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக பிரதமர் மன்மோகன் சிங் இன்று வங்கதேசம் செல்கிறார். அவருடன் வங்கதேசத்தின் இந்திய அண்டை மாநிலமான மேற்குவங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜியும் செல்லவிருந்தார். ஆனால் இந்த ஒப்பந்தத்தில் எனக்கு திருப்தி இல்லாததால் பிரதமருடன் டாக்கா செல்ல மம்தா மறுத்துவிட்டார். தீஸ்தா நதிநீர் பங்கீடு ஒப்பந்தத்தால் மேற்குவங்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். நீர் பங்கீடு முறைக்கு மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்திருப்பதாக தெரிகிறது. மேலும் இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக மேற்குவங்காளத்தில் போராட்டம் நடந்து வருகிறது. மேற்கு தினாஜ்பூர், ஜல்பைகுரி, கூச் பெஹர் ஆகிய மாவட்டங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. வங்கதேசத்துடன் கங்கை நதி நீர் பங்கீடு ஒப்பந்தம் செய்தபோது அப்போது மேற்குவங்க முதல்வராக இருந்த ஜோதிபாசுவுடன் மத்திய அரசு கலந்தாலோசனை செய்தது. அதேமாதிரி தற்போது தீஸ்தா ஒப்பந்தத்தின்போது மம்தா பானர்ஜியை மத்திய அரசு கலந்தாலோசிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்