முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டமன்ற தேர்தல் அட்டவணையை மாற்ற முடியாது

ஞாயிற்றுக்கிழமை, 15 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,ஜன.15 - உத்தரபிரதேசம், உத்தரகாண்டு ஆகிய மாநிலங்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் அட்டவணையை மாற்றி அமைக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. உத்தர பிரதேசம், உத்தரகாண்டு ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல்கள் பிப்ரவரி மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரை பல கட்டங்களாக நடைபெற உள்ளன. இந்த இரு மாநிலங்களிலும் ஏற்கனவே தேர்தல் கமிஷனால் அறிவிக்கப்பட்ட தேர்தல் அட்டவணையை மாற்றியமைக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் வியாஸ் என்பவர் ஒரு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி எஸ்.ஹெச். கபாடியா தலைமையிலான டிவிசன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. இரு மாநிலங்களிலும் சென்ட்ரல் போர்டு கல்வி திட்டத்தின் கீழ் 12 ம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்று வருவதாலும், உத்தரகாண்டில் கடுமையான பனி மூட்டம் இருப்பதாலும் இந்த தேர்தல் அட்டவணையை மாற்றி அமைக்க உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் தனது மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதிகள் தேர்தல் கமிஷனால் அறிவிக்கப்பட்ட தேர்தல் அட்டவணையை தாங்கள் மாற்றியமைக்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்