முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக அனல்மின் திட்டங்களுக்கு தேவையான நிலக்கரியை வழங்க வேண்டும் மத்திய அமைச்சரிடம், அமைச்சர் தங்கமணி நேரில் வலியுறுத்தல்

வியாழக்கிழமை, 8 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,வட சென்னை, உடன்குடி உள்ளிட்ட தமிழக அனல்மின் திட்டங்களுக்கு தேவையான நிலக்கரி ஒதுக்கீட்டைஉடனடியாக வழங்க வேண்டும் என்றும் தமிழகத்திற்கு மத்திய மின்தொகுப்பில் இருந்து முழுமையான மின்சாரத்தை வழங்க வேண்டும் என்றும் டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஷ்கோயலிடம் தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.

இது குறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:-மத்திய ரயில் மற்றும் நிலக்கரிதுறை அமைச்சர் பியுஷ் கோயலை டெல்லியில் நேற்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானகழகத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் விக்ரம்கபூர், எரிசக்தித்துறை முதன்மை செயலாளர் முகமது நசிமுதீன் ஆகியோர் சந்தித்தனர்.

இதன்பின்னர் மின்துறை அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் 2020-21-ல் மின் உற்பத்தி தொடங்கயிருக்கும் வடசென்னை (திட்டம் 3 (1x800MW) உப்பூர் (2x800MW) உடன்குடி (2x660MW)எண்ணூர் சிறப்பு பொருளாதாரமண்டலம் (2x660MW) எண்ணூர் விரிவாக்கம் (1x660MW) எண்ணூர் (மாற்று) (1x660MW) ஆகிய அனல் மின் திட்டங்களுக்கு தேவையான நிலக்கரி ஒதுக்கீட்டினை உடனடியாக வழங்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

15 நாட்களுக்கு... தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் அனல் மின் நிலையங்களுக்கு தோராயமாக நாளொன்றுக்கு 72000 மெட்ரிக் டன்கள் நிலக்கரி தேவைப்படுகிறது. (அதாவது 20 நிலக்கரி தொடர்வண்டிகள்). மழைகாலங்கள் தொடங்க உள்ளதால் அனல் மின் நிலையங்களில் நிலக்கரியின் கை இருப்பை குறைந்தது 15 நாட்களுக்கு அதிகரிப்பதற்காக நாள் ஒன்றுக்கு 20 நிலக்கரி தொடர் வண்டிகள் அனுப்புமாறு கோரிக்கை வைக்கப்பட்டது.

பராமரிப்பு பணி...இதனைத் தொடர்ந்து மத்திய மின்சாரம் மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தித்துறை அமைச்சர் (2 தனி பொறுப்பு) ஆர்.கே.சிங்கை சந்தித்து தமிழ்நாட்டிற்கு மத்திய மின் தொகுப்பில்லிருந்து வரவேண்டிய 6,312 மெகாவாட்டில் தற்போது 3,376 மெகாவாட் மட்டும் தான் வந்து கொண்டிருக்கிறது எனவே மத்திய மின் தொகுப்பிலிருந்து முழுமையாக மின்சாரத்தை தமிழகத்திற்கு வழங்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் காற்றாலை மின்சாரம் அதிகமாக கிடைக்கும் மாதங்களாகிய மே முதல் செப்டம்பர் மாதத்தில் கூடங்குளம் அணு மின் நிலையத்தின் வருடாந்திர பராமரிப்பு பணியினை மேற்கொள்ளுமாறு கோரிக்கைவைக்கப்பட்டுள்ளது என மின் துறை அமைச்சர்.தங்கமணி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து