முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிராம அதிகாரி போல் நடித்து நகைகளை திருடியவர் கைது

வியாழக்கிழமை, 23 பெப்ரவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,பிப்.23 - மதுரையில் கிராம அதிகாரிகள் போல் நடித்து மூதாட்டிகளிடம் 43 பவுன் நகையை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மதுரையில் கடந்த சில நாட்களாக வயதான பெண்களிடம் ஒரு வாலிபர் பேசி நகைகளை கொள்ளையடித்து செல்வது தொடர்பாக அதிகமான புகார்கள் வந்தன. இது குறித்து போலீஸ் கமிஷனர் கண்ணப்பன் உத்தரவின் பேரில் போலீஸ் துணை கமிஷனர் ராஜேந்திரன் ஆலோசனையின் படி உதவி கமிஷனர் கலைமோகன், தெற்குவாசல் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இந்த நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை அருகே பகவதி(50) என்ற மூதாட்டியிடம் ஒரு வாலிபர் வந்து தான் கிராம நிர்வாக அதிகாரி என்றும், என்னிடம் உங்கங் நகைகளை கொடுத்தால் வங்கியில் அடகு வைத்து எளிதான முறையில் பணம் வாங்கி கொடுப்பேன் என்றும் தெரிவித்தார். இதற்கு பகவதி மறுத்தார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து சந்தேகம் அடைந்த பகவதி கூச்சலிட்டார். அப்போது அந்த வழியாக ரோந்து போலீசார் இந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். 

   விசாரணையில் அருப்புக்கோட்டை பாளையம்பட்டி அருகே உள்ள சிலோன் காலனியை சேர்ந்த குமரன்(41) என்பது தெரியவந்தது. இவர் மதுரை மற்றும் பல்வேறு இடங்களில் வயதான பெண்களிடம் நைசாக பேசி நகைகளை கொள்ளையடித்துள்ளது தெரியவந்தது. அவரிடம் இருந்து 43 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்