முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி

புதன்கிழமை, 23 ஜனவரி 2019      விளையாட்டு
Image Unavailable

மெல்போர்ன் : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.

கனவு தகர்ந்தது...

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று காலை நடந்த பெண்கள் ஒற்றையர் காலிறுதி ஆட்டம் ஒன்றில் 16-ம் நிலை வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா)- கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) மோதினார்கள். இதில் செரீனா வில்லியம்ஸ் 4-6, 6-4, 5-7 என்ற செட் கணக்கில் 7-வது இடத்தில் இருக்கும் பிளிஸ்கோவாவிடம் அதிர்ச்சிகரமாக தோற்றார். இதன் மூலம் அவரது 24-வது கிராண்ட் சிலாம் கனவு தகர்ந்தது.

ஒசாகா வெற்றி

மற்றொரு காலிறுதியில் 4-ம்நிலை வீராங்கனை ஒசாகா (ஜப்பான்) 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் சுவிட்டோலினாவை (உக்ரைன்) வீழ்த்தினார். அவர் அரையிறுதியில் பிளிஸ்கோவாவை சந்திக்கிறார்.

மற்றொரு காலிறுதியில் கிவிட்டோவா (செக்குடியரசு)- கோலின்ஸ் (அமெரிக்கா) மோதுகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து