முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி. தேர்தலில் தி.மு.க. கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது - முதல்வர் எடப்பாடி பரபரப்பு பேச்சு

சனிக்கிழமை, 23 மார்ச் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

மக்களுக்கான ஆட்சி...

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் புதிய நீதிக்கட்சி வேட்பாளர்.ஏ.சி.சண்முகம்ஆதரித்தும், ஆம்பூர் அதி.மு.க. வேட்பாளர் ஜோதிராமலிங்கராஜா, குடியாத்தம் வேட்பாளர் கஸ்பா ஆர். மூர்த்தி ஆகியோர்களை ஆதரித்து, ஆம்பூர் பைபாஸ், உமாராபாத், பேரணாம்பட்டு, குடியாத்தம் பஜார் ஆகிய இடங்களில் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசியதாவது :-

நடைபெறுகின்ற நாடாளுமன்ற தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் ஆகும். இந்த தேர்தலில் அ.தி.மு.க. பல்வேறு கட்சிகளை ஒருகிணைத்து கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. சில துரோகிகள், சில விஷமிகள் இந்த ஆட்சியை கலைக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஆசை வார்த்தைகளை கூறி, அவர்களை வெளியேற வைத்ததன் மூலம் ஆம்பூர், குடியாத்தம் சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வந்திருக்கிறது. இந்த இடைத்தேர்தலோடு துரோகிகள் காணாமல் போக வேண்டும். அதற்கு, அனைவரும் ஒன்றினைந்து பாடுபடவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தி.மு.க. ஆட்சி குடும்ப ஆட்சி. அதி.மு.க. ஆட்சி மக்களுக்கான ஆட்சி.

மகப்பேறு நிதியுதவி...

இந்தியாவே தமிழகத்தை உற்றுநோக்குகிறது. ஏனென்றால், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடைபெறுகின்ற தேர்தல். இந்த தேர்தலில் கூட்டணி கட்சிகளின் துணையோடு மகத்தான வெற்றியினைப் பெற வேண்டும். இந்த கூட்டணி வெற்றி பெறுவதற்கு ஜெயலலிதா மக்களுக்காக செயல்படுத்திய மக்கள் நலத்திட்டங்களான விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்குதல், மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிகணினி வழங்குதல், கர்பிணிப்பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகை, மகப்பேறு நிதியுதவி ஆகிய திட்டங்களால், பொது மக்களின் ஒட்டு மொத்த ஆதரவினையும் இந்த கூட்டணி பெற்றிருக்கிறது என்பதற்கு இங்கு கூடியிருக்கின்ற வாக்காளப் பெருமக்களாகிய நீங்களே சாட்சி.

ரூ.6 கோடி நிதியுதவி...

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் கூட்டணி வேட்பாளர் .ஏ.சி.சண்முகம் ஆரம்ப காலம் முதல் அ.தி.மு.க தொண்டர். அவர் தற்போழுது சிறந்த கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக கல்வி வழங்கியும், இலவசமாக மருத்துவ சிகிச்சை அளிக்கும் ஒரு சமுதாய நோக்குடையவராக இப்பகுதியில் தொடர்ந்து மக்கள் பணியாற்றி வருகிறார். தமிழகத்தில் 37 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிகணினி வழங்கப்பட்டுள்ளது. மேலும், 15 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. புனித ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக ரூ.6 கோடி நிதியுதவி வழங்கிய அரசு அம்மாவின் அரசாகும். சிறுபான்மையின மக்களின் பாதுகாவலனாக அம்மாவுடைய அரசு தொடர்ந்து திகழ்ந்து வருகிறது..அ.தி.மு.க சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் 100 நாள் வேலைத்திட்டம் 200 நாளாக உயர்த்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதை நிறைவேற்றித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

என்ன தகுதி இருக்கிறது?

2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தி.மு.க. தலைமையிலான கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அதே நிலை தான் இந்த தேர்தலிலும் ஏற்படும். தி.மு.க தலைவர் ஸ்டாலின் இந்த அரசைப்பார்த்து ஊழல் அரசு என்று சொல்கிறார். இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரு ஆட்சி தி.மு.க. ஆட்சி என்பதை மறந்து விட்டு தற்போது அவர் பேசி வருகிறார்.அ.தி.மு.க ஆட்சியை குறை கூறுவதற்கு ஸ்டாலினுக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். மத்தியில் வலிமையான ஆட்சி இருந்தால் தான். வளமான தமிழகம் இருக்க முடியும் என்பதற்காகத்தான் கூட்டணி அமைத்து இந்த தேர்தலில் போட்டியிருகிறோம். இந்த பகுதிக்கு கூட்டுக்குடிநீர் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படுகிறது. மேலும், பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் உள்ள ஏழை, எளியவர்களுக்கு இந்த ஆண்டு 3 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும். அடுத்த ஆண்டு 5 லட்சம் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். என்று அவர்பேசினார்,.

இரண்டாம் நாள் பிரச்சாரம் மேற்கொண்ட திருவண்ணாமலை, வேலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் செய்த முதலமைச்சர் அவர்களுக்கு அப்பகுதியில் உள்ள ஆண்களும், பெண்களும் திரண்டு உற்சாக வரவேற்ப்பு அளித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து