முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புனித ரமலானை முன்னிட்டு, சென்னையில் அ.தி.மு.க. சார்பில் இன்று இப்தார் நோன்பு திறப்பு - ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். தலைமையில் நடக்கிறது

ஞாயிற்றுக்கிழமை, 2 ஜூன் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : புனித ரமலானையொட்டி அ.தி.மு.க. சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி இன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

ஆண்டுதோறும்...

மறைந்த முதல்வரும் அ.தி.மு.க.வின் பொதுசெயலாளருமான ஜெயலலிதா ஆண்டுதோறும் மூஸ்லீம்களுக்கு இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுப்பார். இதில் பல்வேறு கட்சித் தலைவர்களும் மூஸ்லீம் பிரமுகர்களும் கலந்துகொள்வார். அவரது வழியை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்கள் எடப்பாடிபழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் பின்பற்றி இப்ஃதார் நோன்புக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர்.

முதல்வர் - துணை முதல்வர்.

இந்த ஆண்டு புனித ரமலானையொட்டி அ.தி.மு.க. சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி இன்று 3-ம் தேதி மாலை 5.30 மணிக்கு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், முதல்வரும் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை வகிக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களை முன்னாள் வக்பு வாரியத் தலைவரும், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற செயலாளருமான தமிழ்மகன் உசேன் வரவேற்கிறார். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் சிறப்புரையாற்றுகிறார். முதல்வர் எடப்பாடிபழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நிகழ்ச்சிக்கு தலைமையேற்று வாழ்த்து தெரிவிக்கின்றனர். முன்னதாக அரசு தலைமை காஜி பிராரத்தனை மேற்கொள்கிறார். அ.தி.மு.க. சிறுபான்மை பிரிவுசெயலாளரும் வக்பு வாரியத் தலைவருமான அன்வர் ராஜா நன்றி தெரிவிக்கிறார்.

கூட்டணி தலைவர்களுக்கு அழைப்பு

நந்தம்பாக்கம் தொழில் மையத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா, த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், புரட்சி பாரதம் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி, பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர். தனபாலன், இந்திய தேசிய லீக் தலைவர் ஜவகர்அலி உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து