முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் வினாடி, வினா போட்டி: இந்திய மாணவருக்கு ஒரு லட்சம் டாலர் ரொக்க பரிசு

ஞாயிற்றுக்கிழமை, 30 ஜூன் 2019      உலகம்
Image Unavailable

நியூயார்க் : அமெரிக்காவில் 2019 டீன் ஜியோபார்டி என்ற தலைப்பில் தனிநபர் டி.வி. வினாடி-வினா போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் அவி குப்தா வெற்றி பெற்றார். இவருக்கு ஒரு லட்சம் டாலர் (சுமார் ரூ.70 லட்சம்) ரொக்க பரிசு கிடைத்தது.

அமெரிக்காவில் 2019 டீன் ஜியோபார்டி என்ற தலைப்பில் தனிநபர் டி.வி. வினாடி-வினா போட்டி நடந்தது. ஆண்டுதோறும் நடந்து வரும் இந்த போட்டி டி.வி.யில் ஒளிபரப்பாகி, அங்கு பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ஆண்டு நடந்த போட்டியில், இந்திய வம்சாவளி மாணவர் அவி குப்தா வெற்றி பெற்றார். இவருக்கு ஒரு லட்சம் டாலர் (சுமார் ரூ.70 லட்சம்) ரொக்க பரிசு கிடைத்தது.

இந்த மாணவர், அங்கு ஓரிகான் மாகாணத்தில் போர்ட்லேண்ட் நகரில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார். இதுபற்றி அவர் பெருமிதத்துடன் குறிப்பிடுகையில், இது உண்மைதானா என்பதை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. இந்த வாய்ப்பினை நான் பெற்றதற்கு எவ்வளவு நன்றிக்கடன் உள்ளவனாகவும், அதிர்ஷ்டசாலியாகவும் இருக்க வேண்டும் என்பதை என்னால் வெளிப்படுத்தி விட முடியாது என கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து