முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தடுப்பு சுவர் கட்ட ராணுவ நிதி: அதிபர் டிரம்புக்கு கோர்ட் தடை

ஞாயிற்றுக்கிழமை, 30 ஜூன் 2019      உலகம்
Image Unavailable

ஆக்லாந்து : மெக்ஸிகோ எல்லையில் சுவர் கட்டுவதற்கு ராணுவ நிதியை பயன்படுத்த அமெரிக்க அதிபர் டிரம்புக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அமெரிக்க நாட்டுக்குள் சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் வருவதை தடுக்க கலிபோர்னியா அரிசோனா மற்றும் மெக்ஸிகோ எல்லையில் தடுப்புச் சுவர் கட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்தார். ஆனால் சுவர் கட்டுவதற்கு நிதியை ஒதுக்க அமெரிக்க பார்லிமென்ட்டில் ஜனநாயக கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இதையடுத்து அவசர நிலையை அறிவித்தார் டிரம்ப். மேலும் ராணுவ நிதியை பயன்படுத்தி சுவர் கட்டுவதற்கான முயற்சிகளை துவக்கினார்.சுவர் கட்டுவதற்காக இந்திய மதிப்பில் 17 ஆயிரத்து 237 கோடி ரூபாய் தர அமெரிக்க ராணுவம் ஒப்புக் கொண்டது. இதை எதிர்த்து மத்திய நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஹேவூட் எஸ்.கில்லியம் தடுப்புச் சுவர் கட்டுவதற்கு ராணுவ நிதியை பயன்படுத்த தடை விதித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து