முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உழவர் பெருவிழா: நிதிஅமைச்சர் உதவிகளை வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை, 15 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

 

தேனி, ஏப்ரல்-15  - தேனி மாவட்டம், ஸ்ரீரெங்காபுரம் கிராமத்தில் நடைபெற்ற உழவர் பெருவிழா மற்றும் இல்லத்தரசிகளுக்கு விலையில்லா மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் வழங்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மாண்புமிகு நிதிஅமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் 872 பயனாளிகளுக்கு ரூ.51,87,956 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.  இவ்விழாக்களில் கலந்து கொண்டு நிதிஅமைச்சர் பேசுகையில், தமிழக முதல்வர் தலைமையில் தமிழகத்தில் இன்று நல்லாட்சி நடைபெற்று வருகிறது.  அனைத்து நலத்திட்ட உதவிகளும் தமிழக மக்களின் ஒட்டுமொத்த ஆதரவுடன், சிறப்பாக செயல்பட்டு வருகிறது.  தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தவாறு ஒவ்வொரு திட்டத்தையும் படிப்படியாக நிறைவேற்றி வருகிறார்கள்.  தேர்தல் வாக்குறுதியில் சொல்லாத எண்ணற்ற பல திட்டங்களையும் அறிவித்து அதனையும் நிறைவேற்றி சாதனை படைத்து வருகிறார்கள்.  ஏழை-எளிய மக்களின் வாழ்வை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் 20 கிலோ விலையில்லா அரிசி வழங்கப்பட்டு வருகிறது.  

 

தமிழக அரசின் ஒவ்வொரு திட்டங்களும் கடைக்கோடியில் உள்ள ஏழை குடும்பத்தினரும் பயனடையும் வகையில் திட்டங்கள் தீட்டப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகிறது.  முதியோர் உதவித்தொகை ரூ.500 லிருந்து ரூ.1000 மாக உயர்த்தி முதலமைச்சர் உத்தரவிட்டு, முதியோர்களின் வாழ்வை சிறக்கச் செய்துள்ளார்கள். இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் முதியோர்களுக்கு தமிழகத்தில் மட்டும் தான் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.  ஏழை பெண்களின் திருமணத்திற்கு, பத்தாம் வகுப்பு வரை படித்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் அத்துடன் 4 கிராம் தாலிக்கு தங்கமும், பட்டப்படிப்பு, பட்டய படிப்பு படித்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் அத்துடன் 4 கிராம் தாலிக்கு தங்கமும்,  வழங்கிட உத்தரவிட்டு ஏழை பெண்கள் வாழ்வில் விளக்கேற்றி வைத்துள்ளார்கள்.  மாணவ-மாணவியர்கள் தொடர்ந்து கல்வி பயில அவர்களுக்கு ஊக்கத்தொகையும் கணினியும் வழங்கப்படுகிறது.  ஏழை விவசாயிகள் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திட ஒரு குடும்பத்திற்கு 4 ஆடுகள் வீதம் வழங்கப்பட்டு வருகிறது.  

 

இந்தியாவில் எந்தவொரு மாநிலத்திலும் இல்லாத எண்ணற்ற பல திட்டங்கள் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டு வருகின்றது.  தமிழகத்தில் அனைத்து சமுதாய மக்களும், விவசாய பொதுமக்களும் ஏதாவது ஒரு தமிழக அரசு திட்டத்தின் மூலம் பயன் பெற்று வருகின்றனர். முன்னதாக மாண்புமிகு தமிழக நிதிஅமைச்சர் அவர்கள் வேளாண்மைத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள வேளாண் கண்காட்சிகளை பார்வையிட்டார். 

 

தமிழக முதல்வர் அவர்கள் விவசாயத் தொழிலில் ்டுபட்டு வரும் விவசாய பெருங்குடி மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள்.  விவசாயிகளுக்கு கருவறை முதல் கல்லறை வரை பயனளிக்கக்கூடிய உழவர் பாதுகாப்புத்திட்டம் என்னும் உன்னத திட்டத்தை தீட்டி தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாண்புமிகு அம்மா அவர்களது ஆட்சிக்காலத்தில் விவசாயத்திற்கு 70 சதவிகித அளவில் முக்கியத்துவம் அளித்து விவசாயத்துறைக்கென்று பல்வேறு திட்டங்களுக்கு ரூ.3804 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பத்து பனிரெண்டு ஆண்டுகளில் வெளிநாடுகளுக்கு இணையாக கட்டமைப்பு வசதிகளுடன் தமிழகத்தை உருவாக்கிட திட்டம் வகுத்துள்ளார்கள்.  வருங்கால இளைய தலைமுறையினர் பயன்பெறும் வகையில் தாயுள்ளத்தோடு பல திட்டங்கள் வடிவமைத்து அதனை நடைமுறைப்படுத்த தமிழகம் அனைத்து நிலையிலும் ஏற்றம் பெற எண்ணற்ற திட்டங்களை தீட்டி வருகிறார்.  தேனி மாவட்டத்தில் பின்தங்கிய போடிநாயக்கனுனூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேல சொக்கநாதபுரத்தில் அரசு பொறியியற்கல்லூரி உருவாகிட ஆணை பிறப்பித்து இந்த கல்வியாண்டு முதல் செயல்படும் வகையில் அதற்காக ரூ.94 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

இந்த நிதியாண்டில் மேலை நாடுகளுக்கு இணையாக பொறியியல் கல்லூரிகளின் தரத்தை உயர்த்திட தமிழக முதலமைச்சர்; போதிய நிதிஒதுக்கீடு செய்துள்ளார்கள்.  கல்விக்கும், வேளாண்மைத்துறைக்கும் முதல்வர் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார்கள்.  இந்தியாவிலேயே தமிழகம் அனைத்து துறைகளிலும் முதல் மாநிலமாக விளங்கிட அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறார்கள்.  குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினர்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்திட திட்டங்களை அறிவித்து சாதனை படைத்து வருகிறார்கள்.  அம்மா அவர்களின் ஒவ்வொரு முயற்சிக்கும் பொதுமக்களாகிய உங்களது ஆதரவு தொடர்ந்து இருக்க கேட்டுக்கொள்கிறேன்.  தேனி மாவட்டம், ஸ்ரீரெங்காபுரம் கிராமத்தில் நடைபெற்ற உழவர் பெருவிழா நிகழ்ச்சியில் 28 நபர்களுக்கு வேளாண்மை துறை நலத்திட்ட உதவிகளும், 844 பயனாளிகளுக்கு மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் என்று ஆக மொத்தம் 872 பயனாளிகளுக்கு ரூ.51 லட்சத்து 87 ஆயிரத்து 956 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மாண்புமிகு நிதிஅமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டது.  மேலும் கிராமப்புற ஏழைகளுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டு வருகிறது.  அந்த ஆடுகளை நல்லமுறையில் ஆடுகள் வளர்த்த 15 பயனாளிகளுக்கு முதல்பரிசாக ரூ.3000, 2-ம் பரிசாக ரூ.2,500, 3-வது பரிசாக ரூ.2000 மற்றம் ரூ.1000 வீதம் 12 பேருக்கு ஆறுதல் பரிசாக ஆடுகளுக்கான உணவுப் பொருட்களை மாண்புமிகு நிதிஅமைச்சர் வழங்கினார்.  நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அடிப்படையாக திகழும் வேளாண் தொழிலை மேம்படுத்தி தமிழ்நாட்டில் 2-ம் பசுமை புரட்சியை ஏற்படுத்திட நவீன ஆராய்ச்சி, புதிய பயிர் சாகுபடி தொழில்நுட்பங்கள், துல்லிய பண்ணையம் மற்றும் நுண்ணீர் பாசனம் போன்ற உக்திகளை கையாளுதல், அதிக வருவாய் ்ட்டும் மாற்றுப்பயிர் சாகுபடியினை ஊக்குவித்தல், தரமான இடுபொருட்களை உரிய நேரத்தில் விநியோகித்தல், புதிய உத்வேகத்துடன் கூடிய விரிவாக்க முறைகளை பின்பற்றுதல், பண்ணை இயந்திரமயமாக்குதல், தொழில்நுட்ப பயன்பாட்டில் செயல்திறன்கள் அதிகரிப்பு, அறுவடைக்கு பின் செய்நேர்த்தி தொழில்நுட்பங்கள் மற்றும் அதற்கான உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துதல் என அனைத்து மேம்பாட்டு நடவடிக்கைகளிலும் தமிழக முதல்வர் தனி கவனம் செலுத்தி வருகிறார்.  தமிழக முதல்வர் அவர்கள் பெண்கள் நாட்டின் கண்கள் என்பதை மனதில் வைத்து ஒவ்வொரு திட்டங்களும் தீட்டப்பட்டு நடைமுறை படுத்தி வருகிறார்கள்.  தமிழகத்தில் விவசாயிகளை கருத்தில் கொண்டு உழவர் திருநாளை தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் நடத்தி, அந்த விழாவில் கலந்து கொண்ட அனைத்து விவசாய பெருமக்களுக்கும் அறுசுவை உணவு அளித்து, விவசாயத்திற்கான முக்கியத்துவத்தை உணர்த்தப்பட்டது.

 

இந்நிகழ்ச்சியில் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி.இ.ஆ.ப. அவர்கள் தலைமை உரையாற்றினார்.  மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.விஜயாராணி, வேளாண்மை இணை இயக்குநர் (பொ) திரு.செல்லத்துரை, கம்பம் நகர்மன்ற தலைவர் சிவக்குமார், மாவட்ட ஊராட்சி தலைவர் மகாலிங்கம், துணைத்தலைவர் ஆண்டி, பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் செல்லமுத்து, போடிநாயக்கனுனூர் நகர்மன்ற தலைவர் பழனிராஜ், சின்னமனுனூர் நகர்மன்ற தலைவர் சுரேஷ், தேனி நகர்மன்ற தலைவர் முருகேசன,;; துணைத்தலைவர் காசிமாயன், முன்னாள் தேனி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.கணேசன், உத்தமபாளையம் ஒன்றிய குழுத்தலைவர் தீபாவளிராஜ், தேனி ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் அம்சகோமதி, துணைத்தலைவர் ரமேஷ்பாபு, ஸ்ரீரெங்காபுரம் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி வெங்கட்டம்மாள், ஊராட்சி ஒன்றியகுழு உறுப்பினர் திருமதி.சங்கீதா இளங்கோவன், சின்னமனுனூர் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் பாண்டியராஜ், மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கட்சி முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்