முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரயில் சரக்கு கட்டணம் மீண்டும் 25 சதவீதம் உயர்வு

புதன்கிழமை, 6 ஜூன் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூன்.- 6 - சரக்கு ரயில்களில் கொண்டு செல்லும் அனைத்து பொருட்களுக்கும்  சரக்கு கட்டணம் 25 சதவீதம் உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் ஏழை,எளிய மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள். அதை பொருட்படுத்தாமல் கடந்த மார்ச் மாதம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில் சரக்கு கட்டணம் 20 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துவிட்டது. இதனால் நாட்டில் ஏழை,எளிய மக்கள் மட்டுமல்லாது நடுத்தர மக்களும் அவதிப்படுகிறார்கள். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது மாதிரி மக்கள் அவதிப்பட்டுக்கொண்டியிருக்கிற நேரத்தில் பெட்ரோல் விலையையும் மத்திய அரசு எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்த்தியது. இதனால் மோட்டார் வாகனங்கள் சரக்கு கட்டணத்தை ஏற்றிச்செல்வதற்கு கூடுதல் கட்டணம் வாங்கி வருகின்றன. விலைவாசியும் உயர்ந்துவிட்டது. இந்தநிலையில் ரயில் சரக்கு கட்டணத்தை மத்திய அரசு மீண்டும் 25 சதவீதம் உயர்த்தி உள்ளது. சரக்கு ரயிலில் கொண்டு செல்லும் பார்சல்கள் மற்றும் லக்கேஜ்களுக்கும் 25 சதவீத கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மருந்து பொருட்கள், உணவு தான்யங்கள் உள்பட அனைத்து பொருட்களும் விலை உயர்ந்து மக்கள் மேலும் கஷ்டப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்