முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் 1.90 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

திங்கட்கிழமை, 1 ஜூன் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : இந்தியாவில் 1.90 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 91,819 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 

இந்தியாவில் மொத்தம் 1.90 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8392 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 230 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5394 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 91,819 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 93,322 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மகாராஷ்டிர மாநிலம் நோய்த்தொற்றில் தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 67,655 ஆக உயர்ந்துள்ளது. 2286 பேர் மரணம் அடைந்துள்ளனர். 

தமிழகத்தில் 22,333 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 173 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் 19,844 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 473 பேர் பலியாகி உள்ளனர். குஜராத்தில் இதுவரை 16,779 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், 1038 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து