எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
* பஸ்களில் நின்று பயணிக்க தடை - அமர்ந்து செல்ல அனுமதி * கோவில் திருவிழாக்கள், மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை
* நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் மட்டும் தளர்வின்றி ஊரடங்கு * வெளிமாநிலங்களில் இருந்து வருவோருக்கு இ - பாஸ் அவசியம்
அதிகரித்து வரும் கொரோனா பரவல் எதிரொலியாக தமிழகத்தில் விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் நாளை 10-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, பஸ்களில் நின்று பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பஸ்களில் பொதுமக்கள் அமர்ந்து செல்ல மட்டுமே அனுமதியளிக்கப்படுவதாகவும், கோவில் திருவிழாக்கள், மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் மட்டும் தளர்வின்றி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், 45 வயதிற்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலின் எண்ணிக்கை தினமும் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவல் குறித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆராய தமிழக அரசு எடுக்க உள்ள நிலைப்பாடு குறித்தும், கொரோனா பரவல் குறித்து தடுப்பு நடவடிக்கைகள் என்னென்ன ? எடுப்பது என்பது குறித்து நேற்று முன்தினம் தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதன் முடிவில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கொரோனா பரவல் நிலை, வெளிநாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் தாக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, தமிழகம் முழுவதும் பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு தளர்வுகளுடனும், கீழ்க்கண்ட கட்டுப்பாடுகளுடன், வரும் 30-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஏப்ரல் 5-ம் தேதி சுகாதாரத் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை உள்ளிட்ட முக்கயிமான துறையின் உயர் அலுவலர்களுடனும், மாவட்ட கலெக்டர்களுடனும் ஆய்வு நடத்திய உரிய தடுப்பு நடவடிக்கைளை உடனடியாக தீவிரப்படுத்த அறிவுரை வழங்கியதை அடுத்து, மாவட்ட நிர்வாகங்கள் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், நோய்த் தொற்று வேகமாக பரவி வருவதையும், பொதுமக்களின் நலனையும் கருத்தில் கொண்டு, நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுக்கு முற்றிலும் தடை விதிப்பதும், ஒரு சில செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிப்பதும் அவசியமாகிறது.
பஸ்களில் நின்று கொண்டு பயணம் செய்ய தடை
அதன்படி, சென்னை கோயம்பேடு சந்தையில், சில்லறை விற்பனை செய்யும் கடைகள் மட்டும் நாளை 10-ம் தேதி முதல் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மிகப்பெரிய வணிக வளாகங்கள், பெரிய கடைகளில் 50 சதவிகித வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். மாவட்டங்களுக்கு இடையேயான அரசு பொது மற்றும் தனியார் பேருந்து மற்றும் பெருநகர சென்னையில் இயக்கப்படும் மாநகரப் பேருந்துகளில் உள்ள இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். பேருந்துகளில் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை.
புதுச்சேரி, ஆந்திரம், கர்நாடகம் செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் இருக்கைகளில் அமர்ந்து மட்டுமே பயணிகள் பயணிக்க அனுமதிக்கலாம். அதே வேளையில், பேருந்துகளில் நின்று கொண்டு பயணிக்க பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
வெளி மாநிலத்தவருக்கு இ- பாஸ் அவசியம்
வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்து தமிழகம் வர இ-பதிவு அவசியம். தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் இரவு 8 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட வேண்டும். தேநீர் மற்றும் உணவகங்களில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். ஆட்டோக்களில் இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்க வேண்டும். திருமண நிகழ்வுகளில் 100 பேருக்கு மிகாமல் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இறுதி ஊர்வலங்களில் 50 பேருக்கு மிகாமல் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்படும்.
நோய்ப் பரவலைக் கருத்தில் கொண்டு, முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைப்பிடிப்பது உள்ளிட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கட்டாயம் பின்பற்றி, காய்கறி கடைகள், பல சரக்கு கடைகள் உள்பட அனைத்து கடைகளும், வணிக வளாகங்கள், அனைத்து கடைகள், மிகப்பெரிய (நகை, ஜவுளி) கடைகளில் ஒரே நேரத்தில் 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் மட்டும் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
கட்டுப்பாடுகள் முழு விவரம்
அனைத்து திரையரங்குகளும் 50 சதவீத இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி செயல்பட அனுமதியளிக்கப்படுகிறது. ஷாப்பிங் மால்கள், பெரிய கடைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். அனைத்து கடைகளிலும் ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர 2 பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 45 வயதிற்கு மேற்பட்டோர் 2 வாரத்திற்குள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணி நடைபெறும். சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகளில் பங்கேற்போர் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும், ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது. நீச்சல் குளங்கள், விளையாட்டு விதிகளுக்கு உட்பட்டு செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.
சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஒவ்வொரு மண்டலத்திலும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்படும். நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மக்கள் இந்த பகுதியில் இருந்து வெளியில் வராத வகையில் காவல் துறை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களை கொண்டு தொடர்ந்து 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும்.
இந்த பகுதிகளில் கிருமி நாசினிகள் தெளித்தல் உள்ளிட்ட நோய் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதோடு நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கு உதவி புரிய தன்னார்வலர்களும் நியமிக்கப்படுவர்.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்து வரும் சூழல் நீடிக்கவும், அதனை முழுமையாக தடுக்கவும் பொதுமக்கள் அனைவரும் முழுமையாக பாடுபட வேண்டும். பொதுமக்கள் வெளியே செல்லும் போது பொது இடங்களிலும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். பொது மக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவியும், சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடித்தலும் வேண்டும்.
காய்ச்சல் முகாம்கள் தொடர்ந்து நடத்திடவும், வீட்டிற்கு வீடு சென்று காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்களை தினந்தோறும் கண்காணிக்கவும், நோய் தொற்று ஏற்பட்டவர்களின் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தகுந்த பரிசோதனை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் இதனை தீவிரமாக கண்காணித்து உறுதி செய்ய வேண்டும். நோய் தொற்று அறிகுறி இருந்தால் தாமதமின்றி அருகே உள்ள மருத்துவமனையை அணுக வேண்டும். நோய் தொற்று பரவாமல் இருக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.3 days 34 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்5 days 23 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 2 days ago |
-
சற்று குறைந்தது தங்கம் விலை
29 Apr 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.240 குறைந்து விற்பனையானது.
-
கோவை தொகுதி தேர்தல் வழக்கில் இன்று விசாரணை : சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு
29 Apr 2024கோவை : கோவை பாராளுமன்ற மக்களவைத் தொகுதியில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்களர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து வாக்களிக்க அனுமதிக்க கோரிய வழக்கை இன்று (ஏப்.30) விசாரிக்
-
பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் தேதிகளில் எந்த மாற்றமும் இல்லை : தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
29 Apr 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவித்த தேதிகளிலேயே வெளியாகும் என பள்ளிக் கல்விதுறை அறிவித்துள்ளது.
-
மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி: ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா கோர்ட் தீர்ப்பு - தண்டனை விவரங்கள் இன்று அறிவிப்பு
29 Apr 2024விருதுநகர் : மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்படுகிறது.
-
5 நாட்கள் பயணமாக குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
29 Apr 2024சென்னை : 5 நாட்கள் பயணமாக குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின். முன்னதாக சென்னை விமானநிலையத்தில் அவரை தி.மு.க.
-
மிக கடுமையான வெப்ப அலை தாக்குதல் இருக்கும்: தமிழகத்திற்கு நாளை 'ஆரஞ்சு' எச்சரிக்கை : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்பநிலை அதிகரிக்கும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், குறிப்பாக நாளை மிக கடுமையான வெப்ப அலை தாக்குதலுக்கான ஆரஞ்சு வண்
-
வாகனங்கள் மூலம் இனி கொடக்கானல், ஊட்டி செல்ல இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் : நீலகிரி, திண்டுக்கல் கலெக்டர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு
29 Apr 2024சென்னை : ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7 ம்தேதி முதல் இ-பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என, நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்
-
மாவட்ட நீதிமன்றங்களில் 2,329 பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
29 Apr 2024சென்னை : தமிழக நீதிமன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள், டிரைவர்கள் உள்பட 2,329 பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
நடிகர் சங்க கட்டிட பணிகளுக்கு நெப்போலியன் ரூ.1 கோடி நிதி : தென்னிந்திய நடிகர் சங்கம் தகவல்
29 Apr 2024சென்னை : தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிட பணிகளுக்காக நடிகர் நெப்போலியன் ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளதாக தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்ட வெப்ப அலை எச்சரிக்கையை திரும்ப பெற்றது வானிலை ஆய்வு மையம்
29 Apr 2024புதுடெல்லி : தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்ட வெப்ப அலை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் திரும்ப பெற்றுள்ளது.
-
6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட பிரதமர் மோடிக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
29 Apr 2024புதுடெல்லி : பிரதமர் மோடி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
-
பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தல்: 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் துவங்கியது
29 Apr 2024புதுடெல்லி : பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு டெல்லி, உ.பி. உள்ளிட்ட 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை சென்னையில் கள்ளச் சந்தையில் விற்ற 8 பேர் போலீசாரால் கைது
29 Apr 2024சென்னை : சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஞாயிறன்று நடந்த ஐ.பி.எல்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2024.
30 Apr 2024 -
ஜெய்ப்பூர் விமான நிலையத்துக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்
29 Apr 2024ஜெய்ப்பூர், ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு கடந்த 4 மாதங்களில் 4வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ்நாட்டில் 7 இடங்களில் 104 டிகிரி பாரன்ஹீட் பதிவு : ஊட்டியில் 73 ஆண்டுகளில் நிலவாத வெப்பநிலை
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் ஏழு இடங்களில் 104 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் மேல் வெப்பம் பதிவாகியுள்ளது.
-
தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் போலி வீடியோக்களை உருவாக்கி தவறான தகவலை பரப்புகின்றனர் : கர்நாடகாவில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
29 Apr 2024பெங்களூரு : தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலி வீடியோக்களை உருவாக்கி செயற்கை நுண்ணறிவு மூலம் தவறான தகவல்களை பரப்புகின்றனர் என்றும் மத அடிப்பட
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிப்பு
29 Apr 2024வெலிங்டன் : டி20 உலகக்கோப்பை தொடருக்கு வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கட்டுப்பாட்டை இழந்த அமித்ஷாவின் ஹெலிகாப்டர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
29 Apr 2024பீகார், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில வினாடிகள் கட்டுப்பாட்டை இழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
-
ஐதராபாத்துக்கு எதிரான வெற்றி: புள்ளி பட்டியலில் 3 இடங்கள் முன்னேறியது சென்னை அணி
29 Apr 2024சென்னை : ஐதராபாத் அணிக்கு எதிரான வெற்றியை அடுத்து புள்ளி பட்டியலில் 6-வது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது சென்னை அணி.
-
46-வது லீக் ஆட்டம்: ஐதராபாத்தை வீழ்த்தியது சென்னை
29 Apr 2024சென்னை : தேஷ்பாண்டே அசத்தல் பந்துவீச்சால் ஐதராபாத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது சென்னை அணி.
46வது லீக் ஆட்டம்...
-
எனது அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுக்க வேண்டும் : விராட் கோலி ஓபன் டாக்
29 Apr 2024அகமதாபாத் : என்னுடைய ஸ்ட்ரைக் ரேட், நான் ஸ்பின்னர்களை சரியாக எதிர்கொள்ளவில்லை என்று பேசுபவர்கள் பற்றி கவலைப்படவில்லை,எனது அணிக்கு வெற்றியை பெற்று கொடுக்க வேண்டும் என&nb
-
தமிழ்நாடு-கேரள அணைகளில் நீர் இருப்பு மேலும் குறைந்தது : தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்
29 Apr 2024திருவனந்தபுரம் : தமிழ்நாடு-கேரள அணைகளில் நீர் இருப்பு மேலும் குறைந்ததால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
-
தற்போது சிறப்பான ஆட்டத்தை நாங்கள் வெளிப்படுத்துகிறோம் : பெங்களூரு கேப்டன் பேட்டி
29 Apr 2024அகமதாபாத் : நாங்கள் தற்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம் என்று பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.
-
உதகையை தொடர்ந்து ஈரோட்டிலும் இ.வி.எம். வைக்கப்பட்டருந்த அறையில் ஒரு சி.சி.டி.வி. பழுது : தொழில்நுட்ப கோளாறு என விளக்கம்
29 Apr 2024ஈரோடு : ஈரோடு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் சிசிடிவி கேமரா பழுதாகியுள்ளது. தொழில்நுட்ப கோளாறு என தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.