முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டாஸ்மாக் கடையில் விற்பனை நேரத்தை குறைக்க அரசு பரிசீலனை

வெள்ளிக்கிழமை, 9 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

கொரோனா பரவலை தடுக்கும் ஒரு பகுதியாக டாஸ்மாக் கடைகளில் விற்பனை நேரத்தை குறைக்க அரசு பரிசீலித்து வருகிறது. 

கொரோனா 2-வது அலை தீவிரமாகி வருவதால் பொது இடங்களில் கூடுவதில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஓட்டல், டீக்கடைகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் பகுதிகளுக்கு மீண்டும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.  அந்த அடிப்படையில் மதுபானங்கள் விற்பனை செய்யும் டாஸ்மாக் கடைகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மதுக் கடைகளில் கூட்டமாக நின்று மது பிரியர்கள் மதுவாங்குவதால் தொற்று பரவக்கூடும் என கருதி அங்கு தடுப்பு கட்டைகள் அமைக்கப்படுகின்றன. 

தமிழகத்தில் 5,320 மது கடைகள் உள்ளன. 3,600 மது பார்களும் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் தொற்று பரவக்கூடாது என்பதற்காக டாஸ்மாக் நிறுவனம் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.  சென்னை உள்பட அனைத்து நகரங்களிலும் உள்ள மதுக்கடைகள் முன்பு தடுப்பு கட்டைகள் அமைத்து வரிசையில் நின்று மது வாங்குவதற்கு ஏற்பாடு செய்கிறது. நெரிசல் இல்லாமல் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து மதுவாங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

அந்தந்த டாஸ்மாக் கடை ஊழியர்கள் மூலமாக மது பிரியர்களுக்கு கொரோனா எச்சரிக்கை குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது. சென்னையில் 300-க்கும் மேற்பட்ட மதுகடைகளில் தடுப்பு கட்டைகள் அமைக்கும் பணி நேற்று முதல் தொடங்கி உள்ளன.  தடுப்பு கட்டைகள் அமைக்க இடவசதி உள்ள கடைகளில் இந்த பணி நடைபெற்று வருகின்றன. இன்று முதல் டாஸ்மாக் கடைகளில் கிருமி நாசினி உள்ளிட்ட சுகாதார தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.  பார்கள் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தூய் மைப்படுத்தும் பணியும் நடை பெறுகிறது. மதுபிரியர்கள் மூலம் மற்றவர்களுக்கு தொற்று பரவாமல் இருக்க அனைத்து சுகாதார தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. 

அடுத்த கட்டமாக மதுக் கடைகளின் நேரத்தை குறைக்கவும் பரிசீலிக்கப்படுகிறது. தற்போது பகல் 12 மணி முதல் இரவு 10 மணிவரை கடைகள் செயல்படுகிறது. அந்த நேரத்தை குறைப்பதன் மூலம் தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும் என்று சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில் பார்கள் மற்றும் மதுகடை செயல்படும் நேரத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து