முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

கற்கால ஓவியங்கள் கண்டெடுப்பு

Image Unavailable

விழுப்புரம் - திருவண்ணாமலை மாவட்ட எல்லையை ஒட்டியுள்ள பாக்கம் மலைத்தொடர் ஒட்டிய பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்ட பொழுது செத்தவரை மலையில் ஆவணம் செய்யப்படாத புதிய பாறை ஓவியங்களைக் கண்டறிந்துள்ளனர்.

செத்தவரை ஊரின் தெற்கு மூலையில் செத்தவரை மலைகள் தொடங்கும் இடத்தில் கும்பசுனை என்ற இடத்தில் உள்ள பெரிய பாறையில் இரண்டு இடங்களில் செஞ்சாந்து ஓவியங்கள் மற்றும் இதனருகே உள்ள பாறையில் வெண்சாந்து ஓவியமும் இருப்பது கண்டறியப்பட்டது.

 

ஓவியத்தில் மான் ஒன்றும் அதன் அருகே யானை போன்ற ஒரு உருவம் காணப்படுகிறது. மற்றொரு முனையில் உள்ள செஞ்சாந்து ஓவியத்தில் இரு மனிதர்கள் மட்டும் உள்ளனர். மேலும் அருகில் உள்ள மற்றொரு குன்றிலும் ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவையாவும் புதிய கற்காலத்தைச் சேர்ந்த ஓவியங்களாகக் கருதலாம். இதன் காலம் சுமார் 5000 வருடங்களுக்கு மேல் பழமையானதாக இருக்கலாம் என்ற கருத்தும் நிலவி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 days ago