முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அணுக்கதிர் வீச்சு அதிகரிக்கலாம் - ஜப்பான் அரசு எச்சரிக்கை

புதன்கிழமை, 13 ஏப்ரல் 2011      உலகம்
Image Unavailable

 

டோக்கியோ, ஏப்.13 - ஜப்பானில் பூகம்பம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட அணுமின்சார நிலையத்தில் இருந்து வெளியேறும் அணுகதிர்வீச்சின் அளவு மேலும் அதிகரிக்கலாம் என்று ஜப்பான் அணுசக்தி நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். 

ஜப்பான் நாட்டில் கடந்து மாதம் ஏற்பட்ட பூகம்பம் மற்றும் சுனாமியால் டோக்கியோவில் இருந்து 240 கி.மீ. தொலைவில் உள்ள புகுஷிமா என்ற அணு மின்சார நிலையத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இங்குள்ள 6 அணு உலைகளில் நான்கு உலைகளில் வெடி விபத்துக்களும், தீ விபத்துக்களும் ஏற்பட்டன. இதனால் அணுக்கதிர்வீச்சு அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்த மின்சார நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வசித்துவந்த ஓன்றரை லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். இப்போது இந்த மின்சார நிலையத்தில் மேலும் ஒரு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அணுக் கதிர்வீச்சின் வெளிப்பாடு மேலும் 7 மடங்காக  அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அப்படி அதிகரிக்கும் பட்சத்தில் அது 1986 ஆம் ஆண்டு ரஷ்யாவில் உள்ள செர்னோபிளில் ஏற்பட்ட அணுக் கதிர்வீச்சுக்கு ஒப்பாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். 

இந்நிலையில் நேற்று ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த நில நடுக்கங்களின் அளவு 6.4, 7.1 என்று ரிக்டர் அளவையில் பதிவாக இருந்தது என்று அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே பூகம்பத்தினாலும், சுனாமியினாலும் பாதிக்கப்பட்ட ஜப்பான் மக்கள் மீண்டும் மீண்டும் பூகம்ப தாக்குதலுக்கு ஆளாகி வருவதால் கடும் பீதியில் உறைந்துபோய் உள்ளார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்