முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நான் வாழ விரும்புகிறேன்: டெல்லி பெண் கண்ணீர்

வெள்ளிக்கிழமை, 21 டிசம்பர் 2012      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, டிச. 21 - ஓடும் பேருந்தில் ஒரு கும்பலால் கற்பழிக்கப்பட்டு உயிருக்கு போராடும் மருத்துவ மாணவி தான் வாழ விரும்புவதாக தனது தாயிடம் ஒரு துண்டுச்சீட்டில் எழுதிக் காண்பித்துள்ளார்.  டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் மருத்துவ படிப்பு படிக்கும் மாணவி கற்பழிக்கப்பட்டார். டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரது குடல் பெரிதும் சேதமடைந்ததையடுத்து நேற்று முன்தினம் காலை அவருக்கு 5 வது முறையாக அறுவை சிகிச்சை செய்து குடல் பகுதியில் 15 இன்ச் அளவு நீக்கப்பட்டது. முன்னதாக அந்த மாணவி ஒரு துண்டுச் சீட்டில் தான் வாழ விரும்புவதாக எழுதி தனது தாயிடம் காண்பித்துள்ளார். அறுவை சிகிச்சைப் பிறகும் அவரது உடல் நிலை மோசமாகத் தான் உள்ளது. அறுவை சிகிச்சை செய்யும் அறைக்கு அழைத்துச் செல்லும் முன்பு அவர் தனது தாய் மற்றும் சகோதரனுடன் பேசியுள்ளார். ஆனால் அவரது தந்தை அவரைப் பார்த்து பேசவில்லை. அவரது குடல் பகுதி பெரும் சேதம் அடைந்திருப்பதால் அவருக்கு வாழ்நாள் முழுவதும் நரம்புகள் வழியாகத் தான் உணவு ஏற்ற வேண்டும். ஆனால் அது முக்கியமில்லை. தற்போது அவரது உயிரைக் காப்பாற்றவே போராடுகிறோம் என்று டாக்டர் அத்தானி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago