எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, டிச.24 - பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சிறப்பு வழிகாட்டிகள் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் கல்வி கற்கும் வயதுள்ள அனைவரும் சிறந்த கல்வி பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு எடுத்து வருகிறது. மாணவ, மாணவியர் கல்வியில் தேர்ச்சி பெற்று மேன்மை அடைவதற்காக கல்வி கட்டணம் வழங்குதல், கல்விக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் விலையில்லாமல் வழங்குதல், சீருடை வழங்குதல், சத்துணவு வழங்குதல் போன்ற எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அதேபோன்று, பள்ளி மேற்படிப்பு உதவி திட்டத்தின் கீழ், பெற்றோரின் ஆண்டு வருமானம் 1 லட்சத்துக்கு மிகாமல் இருக்கின்ற பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி பயிலுவதற்காக சிறப்புக் கட்டணம், கற்பிப்புக் கட்டணம், புத்தகக் கட்டணம் ஆகியவற்றை கல்வி உதவித் தொகை அறிவிக்கையில் நிர்ணயிக்கப்பட்ட அளவிலும், தேர்வுக் கட்டணம் முழுமையாகவும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கல்வி உதவித் தொகை அறிவிக்கையில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணம் 1980ஆம் ஆண்டு நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணமாகும். அதன் பிறகு கல்வி நிறுவனங்கள், கற்பிப்புக் கட்டணம், சிறப்புக் கட்டணம் ஆகியவைகளை உயர்த்தியுள்ள போதிலும், கல்வி உதவித் தொகை அறிவிக்கையில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாமல், 1980ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட தொகையே இன்றும் வழங்கப்பட்டு வருகிறது.
எனவே, தற்போது கல்லூரிகளில் அதிகரித்துள்ள கற்பிப்புக்கட்டணம் மற்றும் சிறப்புக் கட்டணம் ஆகியவற்றினால் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியர்களின் கல்வி மற்றும் மாணவ, மாணவியர் சேர்க்கையில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாதிருக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் கல்லூரிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கு, தேர்வுக் கட்டணம் முழுமையாக வழங்குவது போல், அவர்கள் செலுத்தும் கற்பிப்புக் கட்டணம் மற்றும் சிறப்புக் கட்டணம் ஆகியவற்றை, பள்ளி மேற்படிப்பு உதவி திட்டத்தின் கீழ் முழுமையாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும், தொழிற்முறை கல்விகளான பொறியியல், மருத்துவம் போன்ற படிப்புகளுக்கு ஒற்றைசாளர முறையில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவ, மாணவியர்களுக்கு, அரசு கல்லூரிகளுக்கு நிர்ணயம் செய்யப்படும் கட்டணத்தை முழுமையாக பள்ளி மேற்படிப்பு உதவித் திட்டத்தின் கீழ் வழங்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இனி வருங்காலங்களில், அரசில் உள்ள பல்வேறு துறைகள், தங்கள் துறைகளைச் சார்ந்த படிப்புகளுக்கான கல்விக் கட்டணங்களை உயர்த்தும் சமயங்களில் எல்லாம், தனியாக எந்தவிதமான அரசு உத்திரவினையும் எதிர்நோக்காமல், கல்வித் தொகை அறிவிக்கையில் மாற்றம் செய்து, அரசுத் துறைகளால் உயர்த்தப்பட்ட கல்விக் கட்டணங்களை உடனடியாக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி மேற்படிப்பு உதவி திட்டத்தின் கீழ் உயர்த்தி வழங்கவும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதற்காக அரசுக்கு 16.54 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும். இதனால் 74,181 மாணவ, மாணவியர்கள் பயன் அடைவர்.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நலத்துறைகளின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் விடுதிகளிலும், மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் இயங்கி வரும் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ,மாணவியர்களுக்கு சிறப்பு வழிகாட்டி நூல்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதே போன்று, பெரம்பலூர், சிவகங்கை, திருவண்ணாமலை, விழுப்புரம், தருமபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி மற்றும் கடலூர் ஆகிய
8 மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வுகள் எழுதும் மாணவ, மாணவியர்கள் தேர்வுகளில் அதிக அளவு தேர்ச்சி பெறுவதற்கு வசதியாக அவர்களுக்கும் விலையில்லா சிறப்பு வழிகாட்டிகள் வழங்க மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதற்காக 2.47 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால், இந்த மாவட்டங்களில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் பயிலும் 2,21,400 மாணவ, மாணவியர்கள் பயன் பெறுவர்.
அரசின் இந்த நடவடிக்கைகள் மூலம், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவ, மாணவியர்கள் பெரிதும் பயன் அடைவர்.
இவ்வாறு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 6 hours ago |
மினி பான் கேக்6 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
05 May 2024சென்னை : தமிழகத்தில் நாளை தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
தமிழ்நாட்டில் 7.50 லட்சம் பேர் எழுதிய பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியீடு : முடிவுகளை குறுஞ்செய்தியாக அனுப்பவும் ஏற்பாடு
05 May 2024சென்னை : தமிழ்நாட்டில் 7.50 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதிய பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
காயத்தால் ஐ.பி.எல். தொடரில் இருந்து பதிரனா விலகினார்
05 May 2024சென்னை : காயத்திற்கு சிகிச்சை மேற்கொள்ள பதிரனா தாயகம் திரும்பி உள்ளார்.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
ஆள் கடத்தல் வழக்கில் கைது: எச்.டி.ரேவண்ணா கோர்ட்டில் ஆஜர்
05 May 2024பெங்களுரூ ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட எச்.டி. ரேவண்ணா நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
நீலகிரி செல்வோர் இ-பாஸ் பெற இணையதளம் அறிவிப்பு
05 May 2024நீலகிரி : நீலகிரி செல்லும் சுற்றுலாப்பயணிகள் இ-பாஸ் பெறும் வகையில் அதற்கான இணையதளம் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக்கோப்பை: போட்டி அட்டவணை வெளியீடு
05 May 2024துபாய் : ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக்கோப்பைக்கான குழுக்கள் மற்றும் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
வங்காளதேசத்தில்...
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
ஜெர்ஸியை வழங்கிய கோலி
05 May 2024ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
-
குஜராத்தை வீழ்த்தி பெங்களூரு அணி ஹாட்ரிக் வெற்றி
05 May 2024பெங்களூரு : குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 38 பந்துகள் எஞ்சி இருக்க 24 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.