முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

உலகின் மிக உயரமான உறுப்பினர்களை கொண்ட குடும்பத்தினரை பற்றி தெரியுமா?

tallest-family 2022-04-25

அதென்னங்க உலகத்திலேயே மிகவும் உயரமான குடும்பத்தினர். யார் அவர்கள்.. எங்கே வசிக்கின்றனர். பொறுங்க... பொறுங்க.. அவர்களை பற்றி சற்று பார்க்கலாம்.

அமெரிக்காவில் உள்ள மின்னசோட்டா  மாகாணத்தில் எஸ்கோ என்ற இடத்தில் வசித்து வரும் டிராப் என்பவரின் குடும்பம்தான் இந்த பெருமைக்குரியது. இந்த குடும்ப உறுப்பினர்களின் சராசரி உயரமே 203.29 செமீ அதாவது 6 அடி 8.03 அங்குலம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இவர்களுடைய குடும்பத்தில் உள்ள அனைவருமே சராசரியாக 6 அடிக்கு மேலே உயரம் கொண்டவர்கள்தான். வீட்டுக்கு வரும் விருந்தினர்கள் யாராக இருந்தாலும் இவர்களை நிமிர்ந்து பார்த்து பேசியே கழுத்து வலி வந்து விடும் போலிருக்கே... குடும்ப தலைவி கிரிஸ்ஸி டிராப் லவ்ஸ் உயரம் 6 அடி 3 அங்குலம். இவர் உயரம் தான் ஆனால் குடும்பத்தினரின் மற்ற உறுப்பினர்களை விட சற்று குறைவு. இவரது கணவர் ஸ்காட் 6 அடி 8 அங்குலம். இவர்களுக்கு சாவன்னா மற்றும் மொய்லி என இரண்டு மகள்கள். இருவரில் ஒருத்தி 6 அடி 8 அங்குலம், மற்றவர் 6 அடி 6 அங்குலம். இவர்கள் வீட்டின் கடைசி வாண்டு ஆடம் டிராப். அவனது உயரம் 7 அடி 3 அங்குலம்.. அம்மாடியோவ்.. பிறகென்ன இந்த தகவல் கின்னஸூக்கு போய்.. உலகிலேயே மிகவும் உயரமான குடும்பம் என்ற பெருமையையும் அள்ளியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 days ago