முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வணிக சிலிண்டர் விலை உயர்வு எதிரொலி:ஓட்டல்களில் அனைத்து உணவு பண்டங்களின் விலையும் உயர்வு

வியாழக்கிழமை, 5 மே 2022      தமிழகம்
5 Ram 20

Source: provided

சென்னை:வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு ஓட்டல் தொழிலை கடுமையாக பாதித்து உள்ளது. இட்லி, தோசை, காபி மற்றும் உணவு பண்டங்கள் அனைத்தின் விலையும் 5 முதல் 7 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளன.

பெட்ரோல்-டீசலை போலவே கியாஸ் விலையும் உயர்ந்து வருகிறது. குறிப்பாக வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு சிலிண்டர் விலை ரூ.1300 ஆக குறைந்தது. தற்போது ரூ.2500 ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு ஓட்டல் தொழிலை கடுமையாக பாதித்து உள்ளது. உணவு பண்டங்கள் அனைத்தின் விலையும் 5 முதல் 7 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளன.

30 ரூபாய்க்கு விற்பனையான 2 இட்லி ரூ.35 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் ரூ.25க்கு விற்கப்பட்ட காபி ரூ.28 முதல் ரூ.30 வரை உயர்த்தப்பட்டுள்ளது. டீ விலை ரூ.10ல் இருந்து ரூ.12 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் பூரி, பொங்கல், தோசை, கிச்சடி உள்பட அனைத்து வகை உணவுகளும் ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்ந்துள்ளது. மதிய சாப்பாடு ரூ.120-ல் இருந்து ரூ.130ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு குறித்து ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் ரவி கூறியதாவது:-

சிலிண்டர் மட்டுமல்ல எண்ணெய், மளிகை என்று எல்லா பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளன. எனவே உணவு பண்டங்கள் மீதான விலை உயர்வு தவிர்க்க முடியாததாகி விட்டது. இதனால் அடிக்கடி ஓட்டலுக்கு குடும்பத்துடன் வருபவர்கள் இப்போது அதை குறைத்து கொள்கிறார்கள்.

ரூ.115க்கு விற்ற சமையல் எண்ணெய் ரூ.200 ஆகி விட்டது. சரி, இறக்குமதியாகும் எண்ணெய் விலைதான் உயர்கிறது என்றால், உள்ளூர் உற்பத்தியான நெய் விலை கூட உயர்கிறது. எல்லாவற்றுக்கும் ஒரு காரணம் சொல்லப்படுகிறது. இந்த பொருட்களை அடிப்படையாக கொண்டுதான் ஓட்டல் தொழில் நடக்கிறது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாவிட்டால் அதன் தாக்கம் ஒவ்வொன்றிலும் எதிரொலிக்கத்தான் செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து