முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஸ்வரூபம் பட விவகாரம்: மிரட்டல் வருவதாக டி.ஜி.பி.யிடம் கமலஹாசன் புகார்

ஞாயிற்றுக்கிழமை, 6 ஜனவரி 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஜன.- 7 - விஸ்வரூபம் பட விவகாரம்   தொடர்பாக தனக்கு  மிரட்டல் வருவதாக   டி.ஜி.பி.யிடம் கமலஹாசன்  புகார் கூறியுள்ளார்  நடிகர் கமலஹாசன் நடித்துள்ள விஸ்வரூபம் படம் வருகிற 10-​ந்தேதி இரவு டி.டி.எச்.களில்  ஒளி பரப்பு செய்யப்பட உள்ளது. மறுநாள் அந்த படம் தியேட்டர்களில் வெளியாகிறது.  நடிகர் கமலஹாசனின் இந்த புதிய முயற்சிக்கு தியேட்டர் அதிபர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். விஸ்வரூபம் படத்தை தியேட்டர்களில் வெளியிட மாட்டோம் என்றனர். என்றாலும் இதை மீறி டி.டி.எச்.சில் திட்டமிட்டப்படி விஸ்வரூபம் படத்தை வெளியிட கமலஹாசன் உறுதியாக உள்ளார். இது தமிழ்நாட்டு ரசிகர்களிடம் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் நடிகர் கமலஹாசன் நேற்று (ஞாயிறு) 12 மணிக்கு டி.ஜி.பி. அலுவலகத்துக்கு திடீரென வந்தார். சட்டம் ​ ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனை சந்தித்து விஸ்வரூபம் படம் தொடர்பாக ஒரு புகார் மனு கொடுத்தார். பிறகு வெளியில் வந்த கமலஹாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-​ நேர்மையான முறையில் நான் தொழில் செய்வதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். விஸ்வரூபம் படம் திட்டமிட்டப்படி டி.டி.எச்.சில் ஒளிபரப்பாகும். மறுநாளில் 200-​க்கும் மேற்பட்ட தியேட்டர்களிலும் அந்த படம் திரையிடப்படும். தியேட்டர்கள் எண்ணிக்கை மேலும் அதிகமாகலாம். டி.டி.எச்.சில் விஸ்வரூபம் படம் ஒளிபரப்புவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மின்சாரத்தை தடை செய்வோம் என்று சிலர் மிரட்டல் விடுத்துள்ளனர். அவர்களது பெயர் விவரத்தை புகார் மனுவில் கூறி உள்ளேன்.

இது தொடர்பாக உள்துறை செயலாளரையும் சந்தித்து பேச உள்ளேன். மேலும் விஸ்வரூபம் படம் வெளியாகும் போது தியேட்டர்கள் மற்றும் படத்துக்கு பாதுகாப்பு அளிக்க கேட்டுள்ளேன்.

கேள்வி:​ உங்களுக்கு மிரட்டல் விடுத்தது யார்? சினிமா உலகை சேர்ந்தவர்கள் பெயர் உங்கள் புகார் மனுவில் இடம் பெற்றுள்ளதா?

கமல் பதில்: சினிமாகாரர்களின் பெயர்களும் இருக்கலாம். நானும் சினிமாகாரன் தானே.

இவ்வாறு நடிகர் கமலஹாசன் கூறினார்.

நடிகர் கமலஹாசன் டி.ஜி.பி அலுவலகத்துக்கு வந்ததை தொடர்ந்து டி.ஜி.பி. அலுவலகத்தில் உள்ள 2 வாசல்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நிருபர்கள் உள்ளிட்ட யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

விஸ்வரூபம் படம் கோவையில் 36 தியேட்டர்களில் திரையிடப்படும் என்று அந்த மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்nullர் சுப்பிரமணியம் கூறியுள்ளார். சென்னையில் சத்யம், தேவி, எஸ்கேப், ஐநாக்ஸ், பைலட், எம்.எம், பெரம்nullர் எஸ் 2, கொளத்தூர் கங்கா, பாடி சிவசக்தி, பாடி ராதா, nullந்தமல்லி சுந்தர், அனகாபுத்தூர் வெல்கோ, போரூர் கோபாலகிருஷ்ணா ஆகிய தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது. ஏர்டெல் டிஜிட்டல் டி.வி., ரிலையன்ஸ் பிக் டி.வி., டாடா ஸ்கை, வீடியோகான், டிஷ் டி.வி., சன் ஆகிய 6 டி.டி.எச்.களில் 10-​ந்தேதி ஒளிபரப்பாகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்