முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை சவரனுக்கு 240 ரூபாய் அதிகரிப்பு

வியாழக்கிழமை, 12 மே 2022      வர்த்தகம்
Gold 2021 11 23

சென்னையில் நேற்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரித்து ஒரு சவரன் ரூ.38,680-க்கு விற்பனையானது.

தங்கம் விலை கடந்த வாரம் முழுவதும் அதிகரித்து வந்தது. இந்த வாரம் தொடங்கியதில் இருந்து தங்கம் விலை குறைந்து வந்தது. கடந்த 8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஒரு பவுன் தங்கம் ரூ.39,016க்கு விற்கப்பட்டது. அதன்பிறகு திங்கட்கிழமை முதல் தங்கம் விலை குறைந்து வந்தது. அன்று பவுன் ரூ.38,872 ஆக குறைந்தது. கடந்த 3 நாட்களுக்கு முன் ரூ.38,768 ஆக குறைந்தது. நேற்று முன்தினம் தங்கம் விலை மீண்டும் குறைந்து ரூ.38,440க்கு விற்கப்பட்டது.

3 நாட்கள் குறைந்து வந்த தங்கம் விலை நேற்று மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.38,680-க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் நேற்று முன்தினம் ரூ.4,805-க்கு விற்கப்பட்டது. நேற்று கிராமுக்கு ரூ.30 அதிகரித்து ரூ.4,835க்கு விற்பனையானது. அதேநேரத்தில் வெள்ளி விலை நேற்று குறைந்துள்ளது. நேற்று முன்தினம் ஒரு கிராம் வெள்ளி ரூ.65.50க்கு விற்கப்பட்டது. நேற்று கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.65க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.65 ஆயிரத்துக்கு விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து